காத்திருப்பேன் நான்.......!!!

அதிகாலையில் வரும்
பேப்பர் போடுபவனுக்கோ
அல்லது பால் காரனுக்கோ
உன் வீட்டு ஜன்னலை
திறந்து வைத்து
காத்துக்கொண்டிருப்பாய் நீ
அவர்கள் வந்தவுடன்
அவற்றை வாங்க நீளும்
உன் அழகான கைகளை காண
காத்திருப்பேன் நான்.......!!!

எழுதியவர் : jaisee (28-Sep-10, 1:12 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 473

மேலே