கைகுலுக்கல்...நட்பின் அடையாளம் இல்லை.

நீயும்...நானும்
பேசத் துவங்கினோம்...
ஒரு கை குலுக்கலுக்குப் பின்.

இயல்பாய் இருப்பதைப் போல்
பார்த்துக் கொண்டோம்.

கேள்விகளும்..பதில்களுமாய்...
நீளுகிறது நம் உரையாடல்.

உனது பதில்களால் நானும்...
எனது பதில்களால் நீயும்...
கொதிப்புறுகிறோம்.

உடல் தாண்டி வர இயலாத இரத்தம்...
கண்களிலும்...மூளையிலும்
மோதித் திரும்புகிறது ...
அசாத்திய கோபத்துடன்.

இருந்தாலும்...
இடையிடையே...இடையறாது
சிரிக்கிறோம்...
ஒரு கை குலுக்கலுடன்...
விடைபெற்றுக் கொள்கிறோம்...
மீண்டும் சந்திப்பதாய்ச் சொல்லிய படி.

நட்பின் நீட்சியாய் ...ஒரு நாகரீகமாய்..
மற்றவர்கள் புரிந்துகொள்ள...

நம் கண்ணசைவில் இருக்கும்
ஒருசின்னப்பிரிவு...சிரிக்கிறது..
நம்மைப்பார்த்து...

அடுத்த யுத்தத்திற்கான
நாளைக் குறித்தபடி.

எழுதியவர் : rameshalam (5-Jun-12, 12:03 pm)
பார்வை : 178

மேலே