மீண்டும் எப்போது கிடைக்குமோ.?

நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை,
எப்போது கிடைக்குமோ.?
எங்கள் கண்ணீரின் சோகம்,
என்று தீருமோ..!

வாழ்ந்த வாழ்க்கையும்..
வரிந்தனைத்த பாசமும்..
விளையாண்ட வனமும்..!
விரிந்த எம் கிராமமும்..!

மலர் பறித்த வண்ணபூச்சியை,
ஆடு மேய்ந்த அதிசயமும்..!
காதல் கொண்ட கன்னியும்.
கவிதை கொண்ட கன்னனையும்,
பற்றிய ஒரு சில திருடல்கள்..!
எம் கவியின் வருடல்களாக இதோ...!

இந்த மைனா குருவியாய்,
கூவ வேண்டும்..
ஏக்கத்தில் இவனைப் போல்..
தேடிட, ஆடிட, வேண்டும்..

கண்மாய் காட்டில்,
கரிசமைக்க வேண்டு,
கலத்து மேட்டில்,
பசியாற வேண்டும்..

மயக்கத்தில் யாழெடுத்து
இசை மீட்ட வேண்டும்
இசை உண்டு,..!
இனம் கண்டு,
இலைபோட வேண்டும்..!

மேகத்து சாப்பாட்டை,
பூமிக்கு வழிவிட்டு,
வானத்து மழையோடு,
துளியாட வேண்டும்.

மலர்களின் மேலமர்ந்து
கனாக்காண வேண்டும்
மகரந்த தேனெடுத்து
உடல்பூச வேண்டும்

வண்ணத்துப் பூச்சியாய்
நான் மாறவேண்டும்
என் வாழை தோப்பெங்கும்
பறந்து வர வேண்டும்

என் ஆட்டுக் குட்டியாய்
நானாக வேண்டும்
அரசமர இலைத்தின்ன
தாவ வேண்டும்
இங்கும்மங்கும் துள்ளி
ஓட வேண்டும்

கதிரறுக்கும் அறுவாளாய்
நானிருக்க வேண்டும்
கதிரை தூக்கிவரும் வேளையில்,
உனை நானிடிக்க வேண்டும்..

உன் ஒய்யார இடுப்பில்
நான் ஓய்வெடுக்க வேண்டும்
உன் அழகான தோள்மீது
இளைப்பாற வேண்டும்

கம்பங் கதிராக
உருமாற வேண்டும்
உம் கைகளுக்குள் கசங்கி
உணவாக வேண்டும்

செம்பருத்தி பூவாக
நானிருக்க வேண்டும்
உன்சிவந்த விரல் வந்து
எனைப்பறிக்க வேண்டும்


தெப்பத்தில், பூசுகின்ற மஞ்சளாய்
நான்வர வேண்டும்
உன்முகம் தொட்ட சுகத்தில்
நான் கவியெழுத வேண்டும்

வரும் கார்த்திகை விளக்காக
நான்சுடர வேண்டும்
உன்னிரு கைகளுக்குள்
என் உயிர் வாழவேண்டும்

அம்மாவின் முந்தானை மையத்தில்,
அவளிரு கைகளுக்குள்
என் உயிர் மடியவேண்டும்


இதேல்லாம் எப்போது கிடைக்குமோ.?
எங்கள் கண்ணீரின் சோகம்,
என்று எப்போது தீருமோ..!

எங்கள் வெள்ளலூர் வீதியும்,
செங்கதிர் போகட்டும்..!
நாங்கள் இங்கு படும் கஷ்டம் ,
எங்கள் தாய்யிடம் சொல்லட்டும்..

அன்புடன் அரபு நாட்டில் இருந்து,
ஆறுதலுகாக எங்களின் மனம்,
மாறுதலுக்காக, எழுதிய கவிதை,
இப்போ உங்கள் எல்லோருக்காகவும்..!

மதுரை கருப்புவாசம்...

எழுதியவர் : மதுரை வாசகம் (6-Jun-12, 12:55 pm)
சேர்த்தது : vasagam jasmine
பார்வை : 314

மேலே