சமூக அவலங்கள் (கவிதை திருவிழா)

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை அவன்
ஆண்டவன் - படைப்பிலே அர்த்தம் உண்டா
அவனவன் எடுத்துக்கொண்டான் சாதியேய்
ஆண்டு ஆண்டு காலம் அவதியப்பா பூமியில்

பகுத்தறிவது மனிதன் மட்டுமே
மனிதன் - பகுத்தறிந்தானா வாழ்க்கையேய்
விடை இல்லாத வாழ்க்கை என்று
விரைந்து ஓடி விழுந்தான் சேற்றினிலே

வீணற்ற மனிதர்கள் எழுதவில்லை
ஏட்டிலே - விதவை மறுமணம் சாபம்
விதவையின் முகத்தில் விழித்தால் பாவம்
எட்டாத உயரத்தில் தூக்கிளிட்டோம் அவளை

ஒற்றை விரலில் ஓட்டு போட்டுவிட்டு
ஓட்டை - குடிசைலே வாழ வழியின்றி நீ
பத்து விரல் கை நீட்டி
பணம் வாங்கும் பாழாய்போன குடிமகன்

குடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
குடிக்காதே - என்று புட்டியில் எழுதி
மூலைக்கி நான்கு கடை திறந்து
முச்சந்தியில் நிற்கிறது ஜனநாயகம்

பெண்ணால் பிறந்தான் பெண்ணை மணந்தான்
பெண்ணை - பெற்றாலே அய்யோ அவள்
கருவிலே கலைக்கபட்டால்
களம் வந்த பிறகு நசுக்கபட்டால்

நோட்டை காட்டி ஓட்டை வாங்கினார்
நோட்டுகளை - அள்ளுவதர்க்கே அன்றி
அறியாத பொதுஜனம் அதை
அறிந்துகொண்ட அரசியல்வாதிகள்

படித்தவனுக்கு மரியாதை இல்லை எங்கே
படித்தவன் - பகுத்தறிவாய் இல்லை அப்போது
கல்வியேய் விலைகொடுத்து வாங்கினான்
விற்றுவிட்டான் மணபந்தளிலே இப்போது

தந்தையின் சிறுநீரகம் விற்றான்
மகன் - அவன் படித்த கல்வி கடனுக்காக
தாய் இறந்து போனால் முதியோர் இல்லத்தில்
மகன் இறுதிசடங்கு செய்கிறான் இந்தோனேசியாவில்

சகமனிதன் சமூகம் ஆகிறான்
சமூதாயமோ - சாதிகொன்றாய் பிரிந்து கிடக்கிறது
அவலம் அவலம் என்று சொல்வதை விட
கேவலம் கேவலம் என்று சொல்வதே முறையோ ...

எழுதியவர் : Jagadeeshwaran (7-Jun-12, 4:37 pm)
பார்வை : 222

மேலே