சேகுவேரா-ஒரு மாமனிதன்(கவிதை திருவிழா )

சே குவேரா
அவன் ஒரு வீரத்தின் வீரியமிக்க வித்து
களங்கமில்லா இதயத்தின் காவிய நாயகன்
அவன் ஒரு அக்னி பிழம்பு
யாருக்கும் அஞ்சா அசுரன்
பூலோகத்தில் புதுமைக்காக போராடிய
வைரம் போன்ற இதயம் கொண்டவன்
இத்தரணியிலே புரட்சிக்கு
தன்னிகரில்லா வீரத்தால்
தலைமை தாங்கிய புனிதத்தின் புதல்வன்
அவனுடைய ஒவொரு மூச்சியும்
நீதி நீதி என்றே முழங்கியது...
அவனின் ஒவொரு துளி இரத்தமும்
அடிமை சரித்திரத்தை புரட்டவே
சீற்றங்கொண்டு கொதித்தன.
அடிமை என்ற வார்த்தைக்கு
விடைகொடுக்க சுதந்திரம்
என்ற தீப் பொறியை
கொளுத்தி போட்டு
மானிட சமூகத்தில் புரட்சி தீயை மூட்டியவன்.
அகிலத்திலே அடிமைதுவத்தை விரட்டியடிக்க
ஓயாமல் சிந்தித்து
போர்களத்தில் எழுட்சிக்கொண்டு
போராடிய வீரத்திருமகனவன்
அந்த அஞ்சநேஞ்சனின் பெயரைகேட்க
அதிக்கார உலகமே நடுநடுங்கியது
சே குவேரா என்னும் சிங்கத்தின்முன்
ஆணுவமும் அகங்காரமும் கொண்ட
வல்லரசுகளே செம்மறி ஆட்டுகூட்டம்போல்
செய்வதறியாது ஓடி ஒழிந்தன .
ஆம்! அந்த திருமகனின் பெயரைக்கேட்டாலே
திக்கற்ற இளைஞ்சனும்
தீரத்துடன் பொங்கி எழுகின்றான்
ஆம்!இவன்
பாசமுள்ள இளைய தலைமுறைக்கு
பீனிக்ஸ் பறவையின்
பேராண்மையின் பெருந்தத்துவதை
வீரத்தின் தியாகத்தால் விட்டுச் சென்றவன்
எத்தனையோ மாவீரர்கள்
எத்தனையோ போர்களத்தைச் சந்தித்து
வெற்றி முழக்கமிட்டு எக்காலமிட்டன.
ஆனால் சேக்குவேரா தான்
இனம்,மதம் ,நாடு கடந்து
ஒவொரு இளைஞ்சனின் ஆடையிலும்கூட
பெருமித்ததுடன் அணிகலனாகின்றான்
அந்தோ! இந்த உலகம் உள்ளவரை
சே குவேரா இருப்பான் .
சே குவேரா உள்ளவரை
புரட்சியும் புதுமையும்
மகிழ்ச்சியும் மகிமையும்
இம்மானிடத்தின் மங்கா சூரியனைப்போல்
ஒளிவீசவே செய்யும்.
ஒவொரு ஒளிதுகளும்
சேகுவேரா என்று வெற்றி
முழக்கமிடவே போராடுகின்றன.
இளைய சமூகத்தின் தீவிர
வேட்கையாக இருக்கும்
சே குவேரா வாழ்க வாழ்கவே!!!!

எழுதியவர் : எம்.எஸ்.சாஸ்திரி (7-Jun-12, 10:28 pm)
பார்வை : 551

மேலே