இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ் ?

என்னைப் பற்றி
யோசிக்கிற போது
உன்னை யோசித்தேன் !

எவரிடமும்
யாசிக்காதவன்
உன்னிடம்தான் யாசித்தேன் !

எந்த இறை உருவையும்
பூசிக்காதவன்
உன்னைத்தான் பூசித்தேன் !

எனக்கென
ஒரு பொருளையும்
சேர்க்காதவன்
உன்னைத்தான் சேகரித்தேன் !

எந்த இடத்திலும்
தோல்வியுறாதவன்
உன்னிடத்தில்தான் மண்டியிட்டேன் !

எழுதியவர் : முத்து நாடன் (7-Jun-12, 10:58 pm)
பார்வை : 187

மேலே