சமூக அவலங்கள் (கவிதை திருவிழா )
சுதந்திரமோ அறுபது நம்
சுயநல மண்ணில் இருக்கும்
சுகாதார கேட்டாலே மக்கள்
சுதந்திரமோ வாங்கவில்லை
அடிமை பெயராலே இன்னும்
அடிப்படை உரிமைகள் கூட
அடைய வழியில்லை வாழ்வில் சில
அரசு தலைவர்களாலே ...
படித்தவன் வரதட்சணை கொடுத்தான்
படிக்காதவன் கந்து வட்டி கேட்டான்
வேடன் காயிச்சி வடித்தான்
விரட்டி பிடிக்க வந்தவன் லஞ்சம் கேட்டான்
போலி பெயராலே
பொன்னும் பொருளும் சேர்க்க பார்த்தான்
பொல்லாத ஆசையாலே
பொண்டாட்டி புள்ளைகளின் தாலியறுத்தான்
இன மதக் கலவரத்தாலே
இங்கும் அங்கும் குண்டு வெடித்தான்
பணபலம் ஓங்கி பேசும் மூட பழக்கத்தாலே
பாதை மாறிப் போகப் பார்த்தான்
பொது பார்வை பயணத்தில்
சிருபார்வை கேமிராக்கள் ரகசிய
பெண்ணியத்தை உலகே ரசிக்கும்படி
ருசிக்கும் விஞ்ஞனம் சீர்கேட்டில்
விழிப்புணர்வு தந்தாலும்
பழியுணர்வு பாதையிலே பயணிக்கும்
விடை தெரிந்த மருத்துவம்
கர்பிணியின் சுக பிரசவத்தை
பண பிரசவமாய் மாற்றுகையில்
இனவெறி கொலையால் உயிரோடு விளையாடும்
இளைய சமுதாயம் கணினியின் கண் முன்
காமம் விளையாடி மோகம் முடித்ததும்
சொக்காய் போட்டு திரியும் பக்க கேடிகள்
துட்டுக்காக வட்டம் போட்டுக்காட்டும்
மெகா சீரியல் பிறர் துன்பத்திலே
இன்பம் காணும் பள்ளி கட்டணங்கள்
கல்லூரி புத்தகமெல்லாம் கரன்சியாக
மாறிவந்தாலும் கல்வியிலே மாற்றம்
ஒன்றும் மாறிவிடாதே
அப்பன் மகள் பந்தமெல்லாம்
அசிங்கமாகிப் போனது இங்கே
ஆதரவு கேட்டுவந்தால்
கற்புகளவாட பாக்குது
பக்கம் பக்கம் சேதியெல்லாம்
பாலியில் தொல்லையாம் அதில்
பக்க வாதம் வந்தவனும்
போதையிலே கொள்ளையாம்
காவி வேட்டி கடவுளும்
காம வேட்டை போஸ்டரில்
ஒட்டு துணி பேஷனால்
ஓமகுண்ட நீதியில் ஓடி ஓடி
ஒளியுதாம்
ஓட்டுக்காக மக்களாம் இதை
உணர்ந்துமே கட்சி இங்கே தூக்கலாம்
எச்சில் துப்பும் இடத்திலே காந்தி
உழல் கொடி பறக்குதாம்
பாவம் கொண்ட மக்களே
பக்குவமா யோசிங்களேன்
அக்கம் பக்கம் போட்டியில்
ஆருயிரை இழக்காதே
கடவுள் தந்த உயிரையே
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று
கணக்கு போட்டு வாழ்ந்து வந்தாள்
கர்ம வினை நீங்குமே தர்ம வினை ஓங்குமே