அட்ராசக்க அட்ராசக்க

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான் அவன் சூதாட்டம் அதிகம் ஆடுபவன் ஒரு நாள் அவன் நாட்டையே சூதாட்டத்தில் வைத்து தோல்வி அடைந்தான் நாட்டை இழந்து வேறுநாட்டில் ஆடு மேய்த்தான் அப்படி மேய்த்து விட்டு ஒரு மரத்தடியில் படுத்தான் அங்கே ஒரு பச்சோந்தி மரத்தில் இருந்து பார்த்தது அவனிடம் சென்று உன்னை எனக்கு தெரியும் என்றது இவன் பச்சோந்தி பேசுவதை கண்டு ஆச்சர்யப்பட்டான் உடனே பயப்படாதே நன் உனக்கு ஒரு வரம் தருகிறேன் என்றது ஒரு முக்காலி தந்தது இதன் மேல் அமர்ந்தாள் நீ நினைக்கும் எந்த உணவும் உனக்கு கிடைக்கும் என்றவுடன் இவன் அதற்கு நன்றி சொல்லிவிட்டு அதை எடுத்து சென்றான் செல்லும் வழியில் ஒரு இடத்தில் தூங்கிவிட்டு விடிந்து செல்லலாம் என்று முடிவெடுத்தான் அப்பொழுது ஒரு வீட்டிற்கு சென்று இங்கு உறங்கி கலை எழுந்து செல்கிறேன் என்றான் உங்களுக்கு உணவும் நானே தருகிறேன் என்று அந்த முக்காலியில் உட்கார்ந்து உணவை நினைத்தான் உணவு வந்தவுடன் சாப்பிட்டு உறங்கினான் உடனே அந்த வீட்டில் இருந்தவர்களே அதை எடுத்து கொண்டு அவனை துரத்தி விட்டனர் அவன் மறுபடியும் அந்த நடந்ததை அந்த பசொந்தியிடம் கூறினான் உடனே பச்சோந்தி இன்னொரு கடைசி வரம் தரேன் இது ஒரு மந்திரம் நீ யார பாத்து "அட்ராசக்க அட்ராசக்க "என்று சொன்ன சவுக்கு நீ நினக்கரவங்கள அடிச்சிட்டு வரும் சொன்னவுடன் வேகமா அந்த வீட்டுக்கு போனான் எங்க என் முக்காலி என்று கேட்டான் அடிவாங்கனது போதலியா என்று கேட்டனர் உடனே அவன் "அட்ராசக்க அட்ராசக்க" என்று சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் சவுக்கு சென்று அவர்களை துவம்சம் செய்தது பிறகு அவனை சூதாட்டத்தில் ஏமாற்றி நாட்டை பெற்றவனுக்கும் "அட்ராசக்க அட்ராசக்க " பின் நாட்டை பிடித்து மீண்டும் ராஜா ஆனான் நல்ல முறையில் ஆட்சி செய்தான்

எழுதியவர் : prabakaran (11-Jun-12, 7:06 pm)
பார்வை : 552

மேலே