கற்பை போற்றிப்பாடுங்கள்
இன்றைய அநாகரிகஉலகில்,
கற்பின் தூய்மையை எடுத்துரைப்பவர் எத்தனைபேர்
கற்பின் தூய்மையை கற்றவர் எத்தனைபேர்
கற்பின் தூய்மையை கடைபிடிப்பவர் எத்தனைபேர்
கற்பின் கருவறையை பூஜிப்பவர் எத்தனைபேர்
கற்பின் உன்னதத்தை போற்றிப்பாடுவோர் எத்தனைபேர்
ஆணானஎனக்கே கற்பை போற்றும்போது
மனம் ஆனந்தம் கொள்ளுதே;
கற்பின் குலவிளக்கு பெண்ணாயிற்றே,
சீதைபோன்றொரு பெண்ணின் ஆனந்தத்தை
சொல்லவாவேண்டும்.....
பெண்தான் கற்புக்கு சொந்தக்காரி,
ஆனால், இன்றைய உலகில் (எழுத்து உலகிலும்),
கற்பை கவிதைகளில் அதிகம் பாடாது
காதலை யல்லவா பாடுகிறாள்...
சொல்லவே மனம் கசக்கிறது.
(மறந்துவிடாதீர்கள், கற்புதான் அனைத்திற்கும் மூலாதாரணம் (உள்ளர்த்தம் உண்டு))
குறிப்பு:
கற்பை போற்றிப்பாடுங்கள்
நாளைய சந்ததியினருக்கு,
நற்பாடம் புகட்டுங்கள்
(மறந்தும், வெளிநாட்டவர் கூறுவதுபோல், இருபது முப்பது வருடங்களில், இந்தியாவும் வெளிநாட்டு கலாச்சாரத்தோடு வலம்வரும் என்பதை உண்மையாக்கிவிடாதீர்கள்; இது என் தாழ்மையான வேண்டுகோள், நம் தாய்மண்ணின் நல்ல கலாச்சாரத்தை காத்து வருங்கால சந்ததியினருக்கு நல்வாழ்க்கை கொடுங்கள்)
-A. பிரேம் குமார்