ஈழத்து துயரங்கள்
போறேன் தாயே போறேன் உந்தன் மடியை விட்டு,
தொப்புள் கொடியை விட்டு,
நெடிய தூரம் செல்வேனோ. ஒடிந்து வீழ்ந்து மாள்வேனோ,
எமது பெண்ணை வெறி கொண்ட நரிகள் உண்பதனை
கண்டும் மாண்டு போகாத மனதை சுமந்து செல்கிறேன்,
பிஞ்சுகளையும் கருக்கும் நஞ்சுள்ளம் கொண்டவர்களை
நையப் புடைக்காத முடமாகிப் போகின்றேன்,
உறங்கையில் கூட கொல்லும் 'வீராதி வீர்ர்களை'
வெல்ல முடியா துயரத்தோடு செல்கின்றேன்,
இரக்கம் உள்ளவர்கள் இன்னும் இருப்பார்கள்
என்றெண்ணி இறங்கி போகின்றேன்,
அழியாது பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த இனத்தின் குணமாம் வீரம்,
அதனை ஊட்டியே வளர்த்தவள் தான் ஒவ்வொரு தமிழனின் தாயும்,
தூரம் இல்லை எங்காளின் வெற்றி சிந்திய இரத்தங்களுக்கும் கண்ணீருக்கும்
கிடைக்கும் விடை, உடையும் உந்தன் நடை,
இயலாத இனமென்று ஆகிவிட்டோமோ என்று தோன்றுகிறது
இமயத்தில் கொடி நாட்டியவனும் முற்ம் கொண்டே புலி ஓட்டியவளும்
பிறந்த இனத்தை வேலிக்குள் அடைக்கும்
எலியின் இனத்தில் வந்தவர்களிடம் கூட இயலாத
இனமென்று ஆகிவிட்டோமோ.
மண்ணையும் பெண்ணையும் மற்றவன் பறிக்கையில்
பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கும் மடையர்களாகி விட்டோமே என்று,
அமைதிக்கு சம்மதம் என்றும் இயலாமை என்றும் இருவேறு
அர்த்தங்கள் "இப்பொழுதில் இரண்டுமே"
பேடிகளாகிப் போனதை இலகிற்கு காட்டும் திறந்த மூடிகளாகிப் போனதோ.
இனிய இரவில் இன்ப வெல்லத்தில் கழிய வேண்டிய கன்னித்தன்மை
கொடிய மிருக மனிதர்களால் நெடிய அலறல்களோடு அழிந்து போவது
கண்டும் கனியாத நெஞ்சங்கள்,
தமிழன் என்பதை மட்டுமின்றி மனிதன் என்பதையும்
மறந்த கல்லின் வாரிசுகள்,
சொல்லால் என்ன செய்ய முடியும்.