தேவை ஒரு விவசாய புரட்சி... (கவிதை திருவிழா பங்களிப்பு )

அதிகாலை நேரத்தில் கண்விழித்தாய்
தொழுவத்தில் பூட்டிய காளைகளை
கலப்பையில் பூட்டினாய்
காட்டை கழனியாக மாற்றினாய்
கழனியில் நெற்கதிர்களை விளையச்செய்தாய்
உன் உதிரம்
வேர்வையாக உதிர உழைத்தாய்...

எறும்பைப்போல்
களைப்படையாமல்
நீ சேர்த்த
கண்மணிகலாம் நெல்மணிகளை
பொன்மணிகலாக்க
கையேந்தி நிற்கிறாய்...
விளையவைத்தவன் விலகிநின்று
வேறொருவன் விலை நிர்ணயம் செய்ய...

அவன் செய்த விலையோ
விளைச்சலின் செலவிர்க்கேபோக
விளைவித்த நீயோ
வெறுங்கையோடு வீடு திரும்புகிறாய்...

நீ வடித்த வேர்வையில்
வேறொருவன் வாழ்கிறான்...

விடியும்முன் விழிக்கும்
விவசாயக் குடியே
நீ விளைவித்த பொருட்களுக்கு
நீயே விலை செய்திட
தேவை விவசாய புரட்சி
அப்பொழுதுதான் ஏற்ப்படும்
உனது வாழ்வில் மகிழ்ச்சி...

புரட்சி செய்திடு
இனி
பொழுது விடியட்டும் உன் வாழ்வில்...

எழுதியவர் : சிலம்பரசன்.ச (14-Jun-12, 8:21 pm)
பார்வை : 258

மேலே