பெண்களை வசியம் செய்வது எப்படி
பெண்களை வசியப்படுத்துவது எப்படி என்ற புத்தகத்தைப் படிக்க வாங்கிய சாமியார் அதைத் திருப்பித் தரவில்லையாம்,
தருமபுரி மாவட்டத்தின்
பரபரப்பான செய்தி ,
சண்டை முற்றி மண்டை உடைந்து
ஒருவர் மருத்துவமனையில் அனுமதி !
இதோ விளக்கம் முடிந்தவரை
கவிதைவடிவில் ,
சென்னையை சேர்ந்தவர் முருகன்
இவர் ஒரு மனித அவதாரம் எடுத்த கடவுளாம் ,
முக்தி வேண்டியவர் திருவண்ணாமலை
சிவானந்த ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தார் ,
வேத வாக்குகள் ஒலிக்க வேண்டிய வாயில்
காம வார்த்தைகள் உதிரவே
உதையும் அடியும் வாங்கி ஓட்டம் பிடித்தார் ,
தீர்தமலைக்கு !
காவி உடை முருகன் சாமியின் பேரில்
கஞ்சா வழக்கும் ஒன்று நிலுவையில் !
அங்கே முருகன் சாமிக்கு
அறிமுகம் ஆனார் மணிகண்டன் சாமி ,
மணிகண்டன் சாமியின் கையிலிருந்த
\"பெண்ணை வசிய படுத்துவது எப்படி \"
புத்தகத்தை பார்த்த முருகன் சாமிக்கு
காம சல்லாபம் கரை புரண்டு ஓட ,
கடனாக புத்தகத்தை கேட்டார் முருகன் சாமி !
நீண்ட நாட்கள் ஆகியும்
புத்தகம் திரும்பாததால்
ஓசியில் படிக்க புத்தகம் கொடுத்தால்
திருப்பி தரமாட்டாயா என கேட்டவர் ,
கன்னத்தில் லெப்டும் ரைட்டும் திருப்பி போடா ,
மும்முரம் ஆனது சண்டை ,
கடைசியில் காவல் நிலையத்தை நாட ,
புத்தகத்தை தரமறுத்து தன்னை
மணிகண்டன் துப்பாக்கி காட்டி மிரட்டினார் ,
கொட்டப்பட்டி காவல் நிலையத்தில் முருகன் சாமியாரின் புகார் ,
விவரத்தை அறிந்த காவல் நிலையத்தில்
பரபரப்போ பரபரப்பு ,
வழக்கு இன்றும் நிலுவையில் !
கடவுளை வசியப்படுத்தவேண்டியவனுக்கு
கண்ணிகளை வசியபடுத்துவதில் கவனம்
என்னையா செய்வது
இன்றைய உலகம்
\" கசாப்பு கடைக்காரனை நம்பும் ஆட்டின் நிலையில் தானே உள்ளது \"!