நித்திய கண்டம் பூரண ஆயுசு..!

இவனை பார்த்த பிறகு ...
எனக்குள் இறைநம்பிக்கை அற்று விட்டது ..
இன்னமும் இவன் வாழ்கிறானே ,,,?!
ஆன்மீகமே சூனியமாய் போனது ...
அவதாரம் என்கிறானே ஐயோ ?!
பட்டறிவும் இல்லாமல் ...
படிப்பறிவும் இல்லாமல் ..
பசப்புகிரானே பரவசமாய் ...
அவன் பக்தைகளுடன் பக்தியை ...?!
காவி உடையில் ...காம பள்ளி ..
நீல படத்திற்கு காவி வண்ணம் ..?!
ஏழைகளுக்கு அருள்வாக்கு ..
எங்கிருந்து வந்தது ..இவனுக்கு
இத்தனை செல்வாக்கு ..?!
அறியாமைகளின் படையெடுப்பில்
வென்றதா ஆன்மீகபோர் ?!
இவன்தான் இறைதூதுவன் என்றால் ..
இறைவன் நமக்கு தேவையா ?!
இவன்தான் ஏழைகளின் ரட்சகன் என்றால் ..
இந்த இழிஉயிர் வாழ்வு நமக்கு தேவையா ?!
வாழ்கையில் தோற்றுபோகிறவன் ...
தோற்றங்களை ...இறைவன் என்கிறான் ...
இறுதிவரை தோன்றாமலே வீழ்கிறான் ..?!
வாழ்கையை நேசித்தவனோ ...
இயற்கையை இறைவன் என்கிறான் ..
இறந்தும் கூட இறவாமலே வாழ்கிறான் ?!
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பார்கள் ..
இந்த நித்திக்கு என்று கண்டம் ...
நமக்கு என்று பூரண ஆயுசு ?!