சே குவேர - ஒரு மாமனிதன் (கவிதை திருவிழா )

தீவிரவாதி சே குவேர
ஆம் மக்களை பற்றி
தீவிரமாய் சிந்தித்த
ஒரு மாமனிதன் அவனே சே குவேர
மனிதன் பிறக்கிறான் இறக்கிறான்
மாமனிதன் இறந்தாலும்
மறக்க படுவதில்லை
பாறையில் செதுக்கிய கல்வெட்டுகள் போல அவனே சே குவேர
அநீதியேய் கண்டு துடிப்பவன்
எவனோ அவனே நான்
அநீதியேய் கண்டு துடிகிறதா
உன் மனம் நீ என் நண்பன் அவனே சே குவேர
மேற்கே மறையும் சூரியன்
மீண்டும் கிழக்கே உதிக்கும்
விடியலை நோக்கி
வீழ்ந்தவர்கள் இல்லை அவனே சே குவேர
இரும்பு நெஞ்சம் வேண்டாம்
ஆயுதம் ஏந்த
இழகிய மனம் போதும்
இழகிய இளைஞன் அவனே சேகுவர
பிறந்த மனிதன் இறக்கிறான்
இறந்தபின்னும் சரித்திரமாய்
மக்களின் மனதில் வாழும்
மாமனிதன் அவனே சே குவேர
தன் பசி பொறுத்தாலும்
தமையன் பசி பொறுக்காதவன்
சகோதரன்
சக மனிதனை சகோதரனாக
நினைத்தவன் சே குவேர
பருந்துகளிடம் இருந்து
தன் குஞ்சுகளை காக்கும் தாய் பறவை
மக்களை காத்து நின்றான் ஒருவன்
தாய் உள்ளம் கொண்டவன் அவனே சே குவேர
பக்கத்துக்கு ஊருக்கே
தண்ணீர் தராத மனிதர்கள்
பக்கத்துக்கு நாட்டுக்காக சுதந்திரம்
தேடிய மாமனிதன் அவனே சே குவேர
புரட்சியாளன் புதைக்கபடுவதில்லை
மாறாக விதைக்க படுகிறான்
உண்மைளும் உண்மை
விதைக்கப்பட்ட ஒரு விதைதான் அவனே சே குவேர
நீருக்கடியில் முட்டை இட்டு
நிலம் வந்து மடிந்து போகும் மீன்கள் - மனிதன்
விட்டத்தில் கூடு கட்டி
விண்ணை முட்டி பறக்கும் பறவை - மாமனிதன்
அவனே சே குவேர