வேண்டுகோள்

அய்யா ... ஏ .பி.ஜே . அப்துல்கலாம் அவர்களே...
சராசரி இந்தியனா - உண்மையான தமிழனா ... உங்ககிட்ட ஒரு விண்ணப்பமுங்க...

மம்தா பானர்ஜி மேடம் உங்களைப் பத்தி ரொம்ப உயர்வா சொல்லி மறுபடியும் உங்கள ஜனாதிபதியா தேர்வு பண்ணனுமின்னு சொன்னாங்க... நான் சந்தோசப்பட்டேன்..

சமீபத்துல இளைஞர்கள் சந்திப்புல, " காந்திமாதிரி பரிசுத்தமான நல்ல அரசியல்வாதியா வர யாரெல்லாம் விரும்புறீங்க?" ன்னு கேட்டீங்க.

அதுக்கு முன்னாடி நான் ஒருமாசமா யோசிச்சிட்டே இருக்கேன்... அது என்ன தெரியுமா?

ஏன் நீங்க தமிழ் நாட்டுக்கு முதலமைச்சரா வரக்கூடாது?

அந்த வாய்ப்பு உங்களுக்கு ரொம்ப ஈசியா கிடைக்கும் . முதல்ல ஒரு கட்சிப் பேர அறிவிச்சிடுங்க. அதுக்கப்புறம் பாருங்க. நாட்டுல என்ன நடக்குதுன்னு. எந்தக்கட்சியோட கூட்டணிக்கும் அவசியமில்ல. வேற கட்சியில மெம்பரா இருக்குறவங்க யாரையும் சேர்க்காதீங்க.
நாங்க எத்தனையோ கட்சிங்களை நம்பி நம்பி வீணாப்போயிட்டோமுங்க. இனிமேலாவது நாங்க நல்லா இருக்கணும். வருங்கால சந்ததியும் நல்லா இருக்கணும். தெரிஞ்சோ தெரியாமலோ உங்கள பகடைக்காயா வச்சி ரெண்டு தடவை விளையாண்டுட்டாங்க.

ஒன்னு : தான் முதலமைச்சரா ஏற்கனவே இருந்தப்ப தமிழ்நாடு சட்டசபையில ஜனாதிபதியா இருந்த உங்களப் பேசவக்கணுமின்னு ஜெயலலிதா ஆசைப்பட்டாங்க(அது பாசமில்லீங்க. தனக்கு பேரு நல்ல வேனுமின்னுதான் ). ஆனா, கருணாநிதி முட்டுக்கட்டை போட்டாரு.

ரெண்டு: இப்ப உங்கள ஜனாதிபதியா ஆக்குறதுக்கு மம்தாவே ஆசைப்பட்டு அறிவிச்சபிறகும் கருணாநிதி , ஜெயலலிதா ரெண்டுபேருமே மௌனமா இருக்காங்க.

போதாக்குறைக்கு "கலாம்" அப்படீன்னா "கலகம்' அப்படீன்னு தமிழறிஞர் கருணாநிதி பத்த வைக்கிறாரு.

டெபாசிட் வாங்குனதுக்கு சந்தோசப்படுற அல்ப ஆசை புடிச்ச கட்சிங்க தமிழ்நாட்டுல துளிர்க்க ஆரம்பிச்சிடுச்சி. நீங்களே சொல்லுங்க. இதெல்லாம் நல்லதுக்காகவா.?

படிச்சவங்களுக்கும், பண்பாளர்களுக்கும் தமிழ்நாட்டுல இவ்வளவுதாங்க மரியாதை... போதுங்க ...இந்த மண்ணுக்கு உண்மையான மைந்தர்... தமிழன்.. படிச்சவரு... பண்பாளர்... அப்படீங்குற நல்ல பேரை உங்களுக்கு கடவுள் அமைச்சிக்கொடுத்திருக்குறாரு.

நீங்க வாழ்நாளுல தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யணுமின்னு நெனைச்சா நீங்க எங்களுக்கு அட்வைஸ் பண்ணுனாமட்டும் போதாதுங்க. எங்கள administrate பண்ணனுமுங்க. தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லரசு அமைஞ்சா இந்தியாவே வல்லரசா மாறிடும்.

இதுக்கு நீங்க ஒத்துக்காம "முதல்வன்" படத்துல வர்ற அர்ஜூன் மாதிரி ஒதுங்குனா கடவுள்கூட வருத்தப்படுவாருங்க. தயவு செஞ்சி நல்ல முடிவை எடுங்க.

இளைஞர்கள் தான் அரசியலுக்கு வரணுமின்னு ஒதுங்காதீங்க. இளைஞர்களுக்கு வழிகாட்டியே நீங்கதான். என்னோட இந்த கோரிக்கைய நிச்சயமா தமிழ்நாட்டுல எல்லாரும் ஆதரிப்பாங்க.

ஒரு அதிசய அவதாரமா யாராவது வந்தாதான் அப்பப்ப , அங்கங்க, நல்லது நடக்குது. தமிழ்நாட்டுக்கு அப்படிப்பட்ட அவதாரம் நீங்கதாங்க.

"வாங்கய்யா.... வாத்தியாரய்யா... வரவேற்க வந்தோமய்யா"...


குறிப்பு;

எனது இந்த வேண்டுகோளை கண்ணுறும் நண்பர்கள் --- இக்கருத்துக்கு வலு சேர்ப்பீர்கள் என நம்புகிறேன்.

எழுதியவர் : m .பழனிவாசன் (17-Jun-12, 4:58 pm)
பார்வை : 625

மேலே