கனவுமழை

கரை கடந்த காற்று ஒன்று
எங்கள் காடு தேடி வந்ததையா!
கன்னங்கரே லென்ற வானம்
கண்ணாடி போல் சிதறியதே!
சின்னஞ்சிறு துளிகள் இங்கு
சீராகவே விழுந்ததையா!
கண்டங் கண்டமாய்ப் பிளந்த எங்கள்
கரிசக் காடும் நனைந்ததையா!
கண்ணைத் திறந்து பார்கையில் அது
கனவு என்று புரிந்ததையா!

எழுதியவர் : கோவை ஆனந்த் (17-Jun-12, 8:33 pm)
பார்வை : 202

மேலே