நேர்காணல்

விடிந்தும் விடியாமல்
மேகப்போர்வையில் ஞாயிறு
துயில - அலறியது
கடிகாரம்!

பதறி எழுந்தான்
இன்று நேர்காணல்!
படித்தாகிவிட்டதா?
எல்லாம் எடுத்தாகிவிட்டதா?

இந்த அனுபவம் ஒரு
அசட்டுத்தொல்லை!
அவனவன் சொல்கிறான்
அறிவுரை!

இப்படி நட!
அப்படி இரு!
அதைச்சொல்!
இதைச்செய்யாதே!

எத்தனை முறை
படிப்பது! சொல்லிப்பார்ப்பது!

எல்லாம் சுபமாய்
முடிந்தால்
குலதெய்வம் கோவிலில்
கெடா வெட்டு லஞ்சமாய்!

அங்கே கூட்டம் அதிகமே!
வரிசை இல்லை!
அமர இருக்கைகள், எல்லோரும்
அவனைப்போன்றே
படபடப்பும் பரிதவிப்புமாய்!

தனியறைக்கு அழைப்பு!
சென்றான்,
ஒரு கண்டிப்பான முகம்!
ஏளனப்பார்வை!
மிரட்டும் தோரனை!

முடிந்தது நேர்காணல்!
வெற்றிக்களிப்பு அவன் கண்ணில்!
மனைவி சொன்னாள்!
ஒரு லட்சமும்
கொடுத்து
வெட்ககேடாய் ஒரு நேர்காணல்!

குழந்தையை
PRE -KG சேர்க்க
இந்தப்பாடு!

எழுதியவர் : சரவணா (20-Jun-12, 8:05 am)
பார்வை : 356

மேலே