சே குவேர - ஒரு மாமனிதன் (கவிதை திருவிழா)
"சே குவேர" அவதார புருஷன் நீ
துன்பப்படும் மக்களின்
கண்ணீர் துயர்துடைக்கவந்த கரம் நீ
ஏழைகளின் நண்பன் என்று சொல்வோரிடத்தில்
ஏழைகளுக்காக தோள் கொடுத்தவன் நீ
உணர்ச்சிகளின் உருவமே
உரிமைப் பயிரின் வித்தே
புது பாதை காட்டிய ஒளியே
புரச்சிகளின் ஆணிவேரே
வறியோருக்கு வாழ்வின் சொத்தே
உன்னிலிருந்து தெறித்த ஒவ்வொரு துளி இரத்தமும்
எங்கள் நெஞ்சத்தில் வீர வித்துக்கள்
உன்னால் புறப்பட்ட புரச்சி சத்தங்கள்
எங்கள் உணர்வுகளில் பரவிடும் தீப்பொறிகள்
உந்தன் அற்புத பிறந்தநாளில்,
எடுக்கின்றோம் உறுதிமொழி...
"எந்த மனிதனும் தாழ்மை கிடையாது
எவர் ஒருவரும் பட்டினி கிடையாது
உலகில் எல்லோர்க்கும் எல்லாமும்
சமமாக கிடைக்கும் சரியாக கிடைக்கும்
எங்கும் மனிதம் தழைக்கும்
எல்லோர் வாழ்வும் சிறக்கும்"