நிஜம்

என் திசை திரும்பிய உன் உணர்ச்சிக்காற்றின் முதல் நாள் வெப்பத்தை உணர்ந்தவன்.
உன் ஒவ்வொரு அசைவிலும் கிடைத்த தகவல்கள் வெந்த புண்.
உன் மனதில் ஏதோ சுளுக்கு, அதன் வலி உன் இந்த ஏக்கம் என்பதா.
அல்லாடி, அசைந்தாடி, அலை அலையாய்,
கரை கடந்த கடல் நீ.
கனிவுண்டு, காதலுண்டு, நட்புண்டு, அளவில்லா அன்புமுண்டு என் மேல்.
அன்பே எனக்கும் மருந்து இதுவே.
உனக்கும் நிழலாய் நானே.

எழுதியவர் : jujuma (30-Sep-10, 5:47 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 365

மேலே