கல்விப் பெருமை
அறிவை வளர்ப்பது
வற்றாத அருவி ஊற்றாய்
அறிவுச் சுடர் கல்வியே !
பண்பை வளர்ப்பது
நீண்ட பனைபோலே
கடல் போன்ற கல்வியே...!
வற்றாத நதியாக
வாழ வைப்பது
தேன் வாழ்க்கைத் கல்வியே...!
உடலோடு உயிர் போல
காக்க வைப்பது -
உயிர் போன்ற கல்வியே ..!
அறிவுக் கண் பெற்ற
கண்ணில்லா குழந்தை போல
வெளிச்ச மாக்கும் கல்வியே...!
வாழ்வை நிலைக்க வைத்து
நீர் ததும்பா கலன் போல
உயர வைப்பதும் கல்வியே...!
இவையனைத்தும்
அன்போடு ஒருவருக்குக் கிடைத்து விட்டால்
தன பின்னே வரும் அறிவும் செல்வமும் ...!