காடுகள்.

காடுகள்...

வானக் கண்ணீர்
வளர்த்த தவம்.

அங்கங்கே தலையோடு...
திரியும் பூமி கர்வமாய்
வைத்துக்கொண்ட கிரீடம்.

பறவைகளின் சிம்பொனி
திறந்த புதையலாய்த்
திரியும் இடம்.

மனிதர்கள் நுழையத்
தடை செய்யப்பட்ட பகுதி...
மீறும் மனிதர்களால்
தண்டிக்கப்பட்டு விடுகிறது
காடு.

நிற்கும் மரங்களும்.
தஞ்சம் கொள்ளும் விலங்குகளும்..
ஒருபோதும் நடந்துகொள்வதில்லை
ஆறாம் அறிவின் அனர்த்தங்களுடன்.

பேசுவதில்லை...
என்றாலும்

நிறையச் செய்திகளோடு
திரிந்து கொண்டிருக்கிறது
காடு.

எழுதியவர் : rameshalam (29-Jun-12, 2:55 pm)
Tanglish : kaadukal
பார்வை : 758

மேலே