எறும்பென எழுந்து.....

ஆறு நாட்கள்
வேலை நாட்கள்
வேஷம் போட்டு
வேலை செய்து
கூலி வாங்கும்
கூலி யாட்கள்

விடுமுறை தினம்,
விடிந்தும் கட்டிலில்....

ஏனென் மனதில்
வீணெண்ணம் தோன்றி
விரயமாகிறது காலம்...

எறும் பெனயெழுந்து
தினநா ளிதழ்படித்து
திசைஎட் டுமறிந்து
இன் றொருபொழுதேனும்
தனக் கெனமறந்து
இல்லாரிட மடைந்து
இதயம் திறந்து
அவர் உதயம்காண
இன்செயல்புரிந் துவாழோமோ
இன் றொருபொழுதேனும்.......???

- A. பிரேம் குமார்

எழுதியவர் : A பிரேம் குமார் (1-Jul-12, 5:40 pm)
பார்வை : 172

மேலே