அரசு வங்கி ஊழியர்களே..!!

சரியாக எழுத படிக்க தெரியாதவர்கள் வங்கிகளுக்கு வந்துவிட்டால், கொஞ்சம் கேள்விகள் கேட்டால் போதும், வங்கி ஊழியர்களுக்கு எரிச்சல் பொத்துக்கொண்டு வந்துவிடும். அவர்கள் பாவம், என்ன அவசரமோ? என்ன தேவையோ? என்று யோசிப்பதேயில்லை. அவர்களின் அறியாமையே இவர்களுக்கு அவல்பொரி…
ஏழைகளென்றால் என்ன இளக்காரம்? வங்கிகளில் ஐநூறு, அறநூறு ரூபாய் போட்டாலோ, எடுத்தாலோ ஏதோ செய்யக்கூடாததை செய்துவிட்டது போல் ஒரு பார்வை, ஏழைகள் கையில் கிடைத்ததை பத்திரமாக இருக்க வங்கியில் போடுகிறார்கள். அவசரத்திற்கு எடுக்கிறார்கள். அதையும் ஏன் இப்படி ஏளனப்படுத்தி மீண்டும் கந்துவட்டிக்கே அவர்களை திரும்ப வைக்கின்றீர்…
தனியார் வங்கியில் நூறு ரூபாய் போட்டால்கூட மரியாதைதான். நூறு ரூபாய் போடுபவருக்கு ஒரு மரியாதை, பத்தாயிரம் போடுபவருக்கு ஒரு மரியாதை என்று இருந்தாலும், எல்லோரையுமே மதிக்கிறார்கள் என்பதே கவனிக்கப்பட வேண்டியது.
பணக்காரர்களுக்கு உதவ ஆயிரம் பேர் வருவார்கள். ஏழைகளுக்கு உதவ பொது ஊழியர்கள் நீங்களாவது இருக்கக்கூடாதா? படித்த நாம் தான் பாமரர்களுக்கு உறுதுணை. இனி எல்லோரையும் சமமாக நடத்துவோம்.
ஏழைகளுக்கு உதவியாக இருப்போம்.

என்றும் அன்புடன்,
எழுத்து சூறாவளி.

எழுதியவர் : எழுத்து சூறாவளி (1-Jul-12, 11:31 pm)
பார்வை : 233

மேலே