!!! மதிப்பிற்குரிய தோழமைகளே (கவிதை திருவிழா குழு) !!!
மதிப்புக்குரிய தோழர்களே,தோழியர்களே,எழுத்துலகப் படைப்பாளிகளே..!,உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
இந்த அருமையான தருணத்தில் உங்களை மீணடும் சந்திப்பதில் எமக்கு பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
கவிதை திருவிழா குழு அறிவித்த கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை அரங்கேற்றிய உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.!.
படைப்பாளிகளின் மனதிற்குள்ளிருந்து பாய்ந்தோடி வந்த புதுவெள்ளத்தின் வேகப்பாய்ச்சலை,அது சுற்றிச்சுழன்று சென்ற அழகைப் பார்த்து பிரமித்து உள்ளது கவிதை திருவிழா குழு என்பதில் சந்தேகமே இல்லை.
நமது படைப்பாளிகள் யாருக்கும் குறைந்தவர்களல்ல..,அவர்களால் எதையும் பாடமுடியும்.,ஆனால் இவ்வளவு நாளும் தமக்குள் வைத்திருந்த திறமைகளை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார்கள் என்று இத்திருவிழாவிற்கென வந்த கவிதைகளைப் பார்த்தபோது மிக நிச்சயமாய் நன்றாகப் புரிந்து கொள்ளமுடிந்தது.அவர்களை தங்கள் மொழியில் வெளிப்படுத்திக் கொள்ள,மீண்டும் ஒரு சந்தர்ப்பமாக இக்கவிதைத் திருவிழா அமைந்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது.
இப்போது போட்டிக்கென வந்த கவிதைகளில் சிறந்தது எதுவென அறிவிக்கும் நேரம்..,அதற்கு முன் உங்களுடன் சில வார்த்தைகள் பேசும் கடமை எமக்குண்டு.
போட்டிக் கவிதைகளை அனுப்பிவைத்த படைப்பாளிகளின் கவிதைகளில் தெறிக்கும் அனுபவம்,அவர்களின் உள்ளீடு,ஆகியவற்றில் அனைத்துமே சிறந்து விளங்கின என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகமில்லை.
போட்டியில் கலந்து கொள்கிறோம்,வெற்றி பெறவேண்டும் என்பதைத் தாண்டி,தங்களின் எண்ணங்களை,தங்களுக்கு தெரிந்த தகவல்களை,மற்றவரும் படித்து பயன்பெறவேண்டும் என்ற அக்கறையே முதலில் எமக்கு தெரிந்தது.அதற்கான வாய்ப்பாகவே இந்தப்போட்டிகளை படைப்பாளிகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது, அதற்காக இதில் பங்கேற்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எமது வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
இதையெல்லாம் தாண்டி,இந்தக்கவிதைகளில் சிறந்தது என ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு,அவர்களின் படைப்பை-பெருமைப்படுத்துவதாகவும்,ஒரு ஏற்பாட்டை நாம் முதலில் அறிவித்துள்ளதால்,அதையும் சிறப்பாக செய்து முடிக்கவேண்டிய கடமையும் நமக்குண்டு, இவ்வாறு தேர்நதெடுப்பது என்றாலே,அதனை பரிசீலிப்பது கட்டாயமாகிவிடுகிறது. அதனால் தாங்கள் படைப்புகள் அனைத்தும் தற்பொழுது நடுவர்களின் தீவிர பரிசீலனையில் இருந்துகொண்டு இருக்கிறது...
கவிதைகளின் அமைப்பு, அதுகூறும் பொருள் மற்றும் கூறுகள், கவிதைகளின் சொல்லாக்கம், கையாளப்பட்ட விதம், போன்றவைகளை முக்கிய மையமாக கொண்டு தாங்களின் கவிதைகள் பரிசீலிக்கப்படுகொண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துகொள்கிறோம்....
படைப்புகள் எல்லாம் படிப்பவருக்காகவே படைக்கப்படுகிறது.அவ்வாறு படிக்கும்போது,ஒரு எளிமையான வாசகனாய் படிப்பவர் மனதில் என்ன தோன்றுகிறதோ..அதை தமது கருத்தாக விருப்பு வெறுப்பற்று அவர் பதிவிடும்போதே,அது முழுமை பெறுகிறது.அந்த முடிவே சிறந்ததாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்தப்பரிசீலனையை வைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் சில கவிதைகள் பரிசீலனையின் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டது .காரணம், தலைப்புகள் வேறுபட்டு காணப்பட்டதோடு அவை ஆழ்ந்த பொருள் கவியமைப்பு என பொருட்படுத்தமுடியவில்லை.அதனால் அதனை எழுதிய படைப்பாளிகள் வருத்தப்படாமல் தொடர்ந்து மேலும் தங்கள் படைப்புத் திறனைக் கூட்டிக்கொள்ள வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
கவிதைகள் குறித்த பரிசீலனையின்போது,நிறைகள் குறைகள் என இரு அம்சங்களின் அளவுகோல் மட்டுமே நமக்குப் பயன்படுகிறது. அதன் அடிப்படையில்தான் கவிதைகளும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஒரு தாய் தன்குழந்தையினை இறுக்கிப்பிடிப்பதுபோல் தோன்றும்.அப்போது குழந்தைக்கு வலிக்குமே..அது உண்மைதான்.ஆனால் அந்தக்குழந்தை தவறிக் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இறுக்கம் என்ற அளவிலேயே,இப்போட்டியில் பங்கேற்ற படைப்பாளிகள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
மேலும் எந்த ஒரு படைப்பும்,அது எழுதப்பட்ட நோக்கத்தை,இலக்கை சரியாக அடைய வேண்டும் அல்லவா.? அப்போதுதானே அந்தப்படைப்புக்கும்,அதன் கர்த்தாவிற்கும்,அந்தக் கர்த்தாவை அளித்த காலத்திற்கும்,அந்தக்காலம் இடம்பெறும் சரித்திரத்திற்கும் பெருமை..!
உங்களை நீங்கள் அலங்காரப்படுத்திக் கொள்ளமுனையும்போது,எதிரே பார்க்கும் நிலைக்கண்ணாடியில், தலைக்கேசமோ, உடையோ,அதன் வண்ணங்களோ, பொருத்தமில்லாததாய் தோன்றலாம்.அப்படிக் காட்டுவது நிலைக்கண்ணாடியின் தவறல்ல..என்பதை நீங்கள் புரிந்துகொண்டுவிடுவீர்கள்.உடனே உங்களின் அலங்காரம் முழுமையடையும் வகையில் எதை எப்படி மாற்றவேண்டுமோ அப்படி மாற்றிக் கொள்வீர்கள்தானே..? அந்த நிலைக்கண்ணாடி போலவேதான் நாங்களும்.
இறுதியாக ஒன்று,இத்திருவிழாவில் பங்கேற்று வெற்றிக்காக தேர்வு பெறாதவர்கள் எல்லாம் தோற்றவர்கள் என்று அர்த்தமல்ல.சில பந்தயங்களில் வெவ்வேறு சமயங்களில் போட்டி துவங்கும்; முனையிலிருந்து போட்டியாளர்கள் புறப்பட்டாலும் அவர்கள் இறுதிமுனையை எட்டுகின்ற காலஅளவு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.பிந்திப் புறப்பட்டவர்கள் கூட,போட்டிதூரத்தைக் குறைந்த காலஅளவில் கடப்பதால் வெற்றியாளராக அறிவிக்கப்படுவதுண்டு.அதுபோல நீங்களும் உங்களுக்கான போட்டிதூரத்தை இன்னும் கடக்கவில்லை,அதற்கான பயணத்தில் இருக்கிறோம் என்றே கொள்ளுங்கள்.அதனால் நீங்களும் நிச்சயம் ஒருநாள் அதனைக் கடப்பீர்கள்.வெற்றி உங்கள் காலடியை அலங்கரிக்கக் காத்திருக்கிறது.
கவிதைத் திருவிழாக் குழுவினரால் மீண்டும் ஒரு முறை நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.!
தோழமைகள்;.
தோழி ஆயிஷா பாரூக் அவர்களுக்கும்
தோழி லலிதா வி அவர்களுக்கும்
தோழி கவிதாயினி அவர்களுக்கும்
தோழி பிரியாராம் அவர்களுக்கும்
தோழி சாந்தி அவர்களுக்கும்
தோழி ஹிஷாலீ அவர்களுக்கும்
தோழி ஹரிணி கார்த்தி அவர்களுக்கும்
தோழி பிரியா K அவர்களுக்கும்
தோழி சுகன்யா அவர்களுக்கும்
தோழர் இரா. அருண்குமார் அவர்களுக்கும்
தோழர் A. பிரேம்குமார் அவர்களுக்கும்
தோழர் சரவணா அவர்களுக்கும்
தோழர் சாஸ்த்ரி அவர்களுக்கும்
தோழர் நாக சுந்தரம் அவர்களுக்கும்
தோழர் மதுரை வாசகம் அவர்களுக்கும்
தோழர் ஜெகதீஸ்வரன் அவர்களுக்கும்
தோழர் தம்பு அவர்களுக்கும்
தோழர் மோசே அவர்களுக்கும்
தோழர் பிரதீப் அவர்களுக்கும்
தோழர் வினாயக்முருகன் அவர்களுக்கும்
தோழர் எழுத்து சூறாவளி அவர்களுக்கும்
தோழர் மனுநீதிச்சோழன் அவர்களுக்கும்
தோழர் ரமேஷ் ஆலம் அவர்களுக்கும்
தோழர் அருண் பா அவர்களுக்கும்
தோழர் தூ. சிவபாலன் அவர்களுக்கும்
தோழர் ஜெயராஜேந்திரம் அவர்களுக்கும்
தோழர் பிரகாஷ் சோனா அவர்களுக்கும்
தோழர் மனவாசல் நாகா அவர்களுக்கும்
தோழர் சேதுராமலிங்கம் அவர்களுக்கும்
தோழர் காலிப் சாஹிப் அவர்களுக்கும்
தோழர் எழுத்தோலை கோ. ராம்குமார் அவர்களுக்கும்
தோழர் நா. ஜெயபாலன் திருநெல்வேலி அவர்களுக்கும்
தோழர் சுதா கண்ணன் அவர்களுக்கும்
தோழர் சிலம்பரசன் அவர்களுக்கும்
தோழர் கிருபா கணேஷ் அவர்களுக்கும்
தோழர் கவிமணியன் அவர்களுக்கும்
அய்யா புதுவை காயத்ரி அவர்களுக்கும்
தோழர் பாலமுதன் ஆ அவர்களுக்கும்
தோழர் முருக பூபதி அவர்களுக்கும்
தோழர் பாலாஜி அவர்களுக்கும்
தோழர் சக்தி G அவர்களுக்கும்
தோழர் S.M ஆனந்த் அவர்களுக்கும்
தோழர் ப. ராஜேஷ் அவர்களுக்கும்
மற்றும் இந்த கவிதை திருவிழாவை மேலும் சிறப்பித்த தோழமை உள்ளங்களுக்கும் எங்களது நன்றியினை மீண்டும் உரித்தாக்குகிறேன்....
தோழர் கார்த்திக் M.P அவர்களுக்கும்
தோழர் கவியமுதன் பொ அவர்களுக்கும் - காலதாமதமாய் இணைந்ததால் எங்கள் சிறப்பு நன்றியினை மட்டும் உரித்தாக்குகிறோம்...
தேர்வுக்கான முதல் கட்ட சுற்று முடிந்து, இரண்டாம்கட்ட தேர்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது, மூன்றாம் கட்ட தேர்வுகள் முடிந்தபிறகு இறுதி முடிவுகள் வெளியிடப்படும்...
பொறுத்திருங்கள் விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்...
இப்படிக்கு
கவிதை திருவிழா குழு.