புத்தம் புது கொலுசு 555

உயிரே.....

வெண்பனி மேகத்தில்
வெண்ணிலவை பிடித்து...

வெள்ளி நீரோடையில்
கரம் தொடுத்து...

நட்சத்திர கூட்டத்தில்
நட்சத்திரம் பறித்து...

பூ போன்ற உன் பாதங்களை
என் கைகளில் சுமந்து...

வாழை தண்டு போன்ற
உன் கால்களுக்கு...

நான் மாட்டிவிட்டேன்
உனக்கு வெள்ளி கொலுசு...

புத்தம் புது பூவே
உனக்கு நித்தம் மாட்டிவிடுவேன்...

புத்தம் புது கொலுசு.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (5-Jul-12, 3:15 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 249

மேலே