வடை போச்சே

நெரிசல் மிக்க மாநகர பேருந்தில்
சிரம பட்டு ஏறி உள்ளே நகர்தேன்
பேருந்து மெதுவாக நகர்ந்தது
அவ்வளவு அலறல் சத்தத்திலும்
அழகாக கேட்டது எஸ்க்குஸ்மீ என்ற அந்த குரல்,
திரும்பி பார்த்தேன் நான் அந்த குரலை போலவே
அவளும் அவ்ளோ அழகு
சொல்லுங்கள் என்றேன் நான்,
ஒரு அண்ணாநகர் டிக்கெட் வாங்குங்கள் என்றல் அவள் ,
நானும் சரி என்று சொல்லிவிட்டு டிக்கெட் வாங்க முர்ப்படேன்
டிக்கெட் வாங்கும் அந்த கொஞ்ச நேரத்தில் அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சிரித்துகொண்டே இருந்தேன்
அவளும் பார்த்தல் சிரித்தல்
என் மனதில் பட்டாம்புச்சி பறக்க எனக்கும் காதலி கிடைக்க போகிறாள் என்ற சந்தோஷத்தில் டிக்கெட்டை வாங்கி அவளிடம் கொடுத்தேன்
அவள் சிரித்து கொண்டே சொன்னால்
தேங்க்ஸ் அண்ணா ..........

என்ன கொடுமை டா இது இன்னைக்கும் வடை போச்சா ............

எழுதியவர் : கலிமுல்லா (7-Jul-12, 9:18 pm)
பார்வை : 1060

சிறந்த நகைச்சுவைகள்

மேலே