சுயமரியாதை சுதந்திரம்
பஞ்சணையில் படுத்துறங்கி
பன்னீரில் குளித்து
ஆனந்தமாய் பெறப்பட்டதல்ல சுதந்திரம்.
அடிமை முள்ளில் படுத்துறங்கி
இரத்தத்தில் குளித்து
தடியடிகள்
பல நடத்தி
மரணம் என்னும் முடிவில் பெறப்பட்டதல்லவா?
இச்சுதந்திரம்.
தன்மானம் ஒன்றினை விதைகளாய்
விதைத்து
மனிதன் என்னும் விருக்ஷம் வளர்த்த சுதந்திரம்
ஆங்கிலேய காட்டாறுகளை
விரட்டியோட செய்த
தன்மான சுதந்திரம்
இத்தனை பெருமைகள் நமக்கிருக்க
இன்னும் தயக்கம் எதற்கு?
நாம் இந்தியன் என்றுரைக்க ..
வீர உரைதனில் விடுதலை வேட்கையினை
வேள்விகலாக்கிய
சுயமரியாதை சுதந்திரம்.
மனிதன் என்று சொல்வதைவிட
இந்தியன் என்றே மார்த்தட்டுவோம்.