வழக்கம் போல்....

வழக்கம் போல்
எழுந்திருந்து.....

வழக்கம் போல்
குளித்து....

வழக்கம் போல்
பேராசைகளைப்
பிரார்த்தனை
என்ற பெயரில் செய்து....

வழக்கம் போல்
சாப்பிட்டு....

வழக்கம் போல்
அலுவலகம் கிளம்பி...

வழக்கம் போல்
பேருந்தில்....

வழக்கம் போல்
காதலிக் கனவுகளோடு...

வழக்கம் போல்
யாரும் அறியாமல்...

வழக்கம் போல்
ஓரப் பார்வைகளோடு...

வழக்கம் போல்
பெரு மூச்சு விட்டு...

வழக்கம் போல்
அலுவலகம் இறங்கி....

வழக்கம் போல்
ஊர்க்கதை
அரசியல்
ஊழல் பேசி....

வழக்கம் போல்
மணிக்கொரு முறை
நாயர் கடை
டீ சாப்பிட்டு...

வழக்கம் போல்
மதியம் அரட்டையோடு
சாப்பிட்டு...

வழக்கம் போல்
ஓய்வெடுத்து...

வழக்கம் போல்
கடைசி அரை மணி...
பரபரப்பாய்...
மயங்குகிற பம்பரமாய்
வேலை செய்து...

வழக்கம் போல்
பேருந்தில்
களைத்த ஓரப் பார்வையோடு...

வழக்கம் போல்
வீடு திரும்பி

வழக்கம் போல்
இந்தக் கவிதையை
எழுதி வைத்தேன்....

என்றாலும்...

இந்தக் கவிதைதான்

வழக்கம் போல்
இல்லை.

எழுதியவர் : rameshalam (10-Jul-12, 3:01 pm)
சேர்த்தது : rameshalam
Tanglish : vazhakkam pol
பார்வை : 204

மேலே