மனிதம்
யாவரையும் உறவென்று ஏற்று
உள்ளன்போடு உறவாடும் நேசமும்
தன்னைப்போல மற்றவரையும் கருதும்
கருணை கொண்ட பாசமும்
உண்மையே உன்னதமென்றெண்ணும்
உயர்வான உள்ளமும்
நன்னெறியை நிலைநறுத்திடும்
நானிலம் போற்றும் நல்லெண்ணமும்
பிறர் துயரை தன் துயராய்
பாவித்துப்பரிதவிக்கும் மனிதநேயமும்
மனதில் உதித்தல் வேண்டும்
பிறப்பிலேயே மானிடப்பிறவி பெற்றாலும்
இச்சிறப்பான குணங்கள் இல்லையேல்
மானிடர் இல்லையே நாமும்...!!!!
---என்றும் அன்புடன் பாத்திமா...