அந்த ஓர் நொடி என் உயிர் நாடி - 1!!!

இயற்கையோடு துள்ளி திரிந்து உலா வந்த ஒருவன் தன் மனதாலும், உயிராலும் காதல் வசப்படுகிறான்; அதுவும் மழலைப் பருவத்திலிருந்து பழகிவந்த தன் தோழியின் மீது. கண்டவுடன் வந்த காதல் இல்லை கரைந்து போக; அது மனதலவில் வந்தக் காதல் என்பதால் துடித்துப் போகிறான்; காரணம் காதலை அவளிடம் சொன்னதும் அவள் மௌனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்ததால். காலங்கள் பல கழிந்தன அவள் கொண்ட மௌனத்தின் துயர் தாங்க முடியாமல் தவிக்கிறான். அந்த பாவையை பிரிய முடியாமல் "எனக்கு காதலனாக உனக்கு தகுதி இல்லை என்று உன் மௌனம் கூறுகிறது. பரவாயில்லை உன் தோழனாகவாவது உன் வாழ்வில் வருகிறேன்; என்னை மன்னித்து ஏற்றுக்கொள்" என்று கண்ணீரோடு கடிதம் அனுப்புகிறான் ஆனால் அதற்கும் மௌனத்தை மட்டுமே பதிலாக அனுப்புகிறாள். மீண்டும் தன் கண்ணீர் கதையை கவிதையாக்கி அனுப்புகிறான் அந்த பாவையின் பதிலை கேட்பதற்காக...


சிறகொடித்த பறவையாய் தவிக்கிறேன் நீ கொள்ளும் மௌனத்தால்...

சுகமாகத்தான் உள்ளது ஒடித்தது நீ என்னும் பொழுது!!!

ஆனால்...
மனம் கலங்கி துடிக்கிறேன் நீ மௌனத்தை துறக்கமாட்டாயா என்று...

நீ சொல்லும் ஒரு வார்த்தையில் துளிர்த்துவிடும் என் சிறகுகள்!!!

என் காதலன் நீ என்றல்ல; என் உயிர் தோழன் நீ என்று!!!

பேச முடிந்தும் உன்னால் பேச முடியவில்லை!!!
பேச முயன்றும் என்னால் பேச முடியவில்லை!!!

காலம் முழுவதும் காத்திருப்பேன் நீ மௌனத்தை துறக்கும் அந்த ஓர் நொடிக்காக!!!

எழுதியவர் : கார்த்திக்... (13-Jul-12, 11:14 pm)
பார்வை : 7934

மேலே