காதலை சொல்லும் பிறந்தநாள் வாழ்த்து மடல்

இனியவளே,

உன் மெல்லிய விரல் பிடித்து
நடக்க துடிக்கும் பலபேரில்
நானும் ஒருவன்.....

அன்பிற்கு இலக்கணமாய் திகழும்
என் ஆருயிர் தோழியே
உன் அன்பு தாயின் அன்பைப்போல்
உண்மையானது தூய்மையானது
உணர்கிறேன் உன் நட்பை உன் அன்பை

உன் பூப்பாதங்களை ஒருகோடி
மலர்களை கொண்டு அர்ச்சிக்கிறேன்
உன் அன்பிற்கு ஏங்கித்தவிக்கும் எனக்கு
உன் நட்பு தந்தமைக்காக.....

மெல்லிய மொட்டாக அரும்பி
இன்று பூமித்தாயின் மடியில்
பாதம் பதித்த இந்த
என் சின்ன பூங்குயிலுக்கு
என் இதயம் கனிந்த
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.....

எழுதியவர் : ஆனந்த் லிங்கம் கி (17-Jul-12, 11:02 am)
பார்வை : 749

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே