நட்பு (உயிரின் வலிகள் விழிகளில்)
உயிரின் வலிகள் விழிகளில்:
பல கருக்களில் பிறந்து கல்லூரி எனும் ஒர் கருவில் சேர்ந்தோம்!
நாம் நடந்த வழிகளில் எல்லாம் என் விழிகளின் கண்ணீர்!
எப்படி நான் மட்டும் நடப்பது அந்த கண்ணீரில் நீங்கள் இல்லாமல்!
வகுப்பறையில் நீங்கள் சொல்லிக் கொடுத்தப் பாடங்கள், எழுதிய எழுத்துக்கள் எல்லாம் என்னுடன் தான் இருக்கிறது!
ஆனால் நீங்கள் மட்டும் என்னுடன் இல்லை மீண்டும் எப்படி படிப்பது நீங்கள் இல்லாமல்!
நாம் அமர்ந்த கேண்டீன் மேஜைகள் எல்லாம் காலியாக தான் இருக்கிறதாம்! மீண்டும் எப்பொழுது வருவீர்கள் என்னுடன் நாம் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து தேனீர் அருந்த!
நாம் ஒன்றாக அமர்ந்த, நின்ற இடங்கள் எல்லாம் தனிமையில் தவிக்கிறது நீங்கள் இல்லாமல்!
நாம் ஒன்றாய் பார்த்த சினிமா காட்சிகள் எல்லாம் மீண்டும் பார்க்கும் பொழுது நினைவுக்கு வருகிறது காட்சிகள் அல்ல நம் செய்த ஆர்ப்பாட்டங்கள்!
நாம் கண்ட கனவுகள், நாம் வாழ்ந்த நாட்கள் எல்லாம் இப்பொழுது எனக்கு நினைவுகளாக வந்தது கண்ணீருடன்!
கண்ணீருடன் என்றும் நட்புடன்
-கார்த்திக் PGR