பெண்கள் பேசும் பச்சோந்திகள்!..

பெண்ணே,

அளவில்லாத
உன் அழகுக்கு
அலைந்து
என் ஆயுளை
இழந்தேன்!..

பூப்போன்ற உன்
பேச்சில் பொசுங்கி
என் பெற்றோரை
இழந்தேன்!..

உனக்கென வாங்கிய
தாவணியை
தனக்கென கேட்ட
என் தங்கையை
இழந்தேன்!..

நீதான்
சொர்க்கம் என
நினைத்து
என சொந்தத்தை
இழந்தேன்!..

இமை மூட வேண்டிய
இனிய இரவுகளில்
உன்னையே எண்ணி
என உறக்கங்களை
இழந்தேன்!..

அடியே,

நான்
அனைத்தையும் இழந்தேன்
உனக்காக!..
நீ
எதனை இழந்தாய்
எனக்காக!..

என்மேல் பாசம் காட்டி
பறித்தாயே
பணம் கோடி!..
அப்பாசத்திற்கு அடையாளமாய்
வளர்கிறது
எனக்கு தாடி!..

என்னை மறந்து
உன் வீட்டில்
நீ ஹாயாக!..

உன்னையே நினைத்து
நடுரோட்டில்
நான் நாயாக!..

இறைவா,

புரிந்து கொண்டேன்
பெண்கள் பணத்துக்காக
காதலிக்கும்
பேசும் பச்சோந்திகள்!..

எழுதியவர் : Rajankhan (19-Jul-12, 1:28 pm)
பார்வை : 345

சிறந்த கவிதைகள்

மேலே