புன்னகை ஓவியம்

புன்னகையால்
புகழ் பெற்ற
மோனா லிசா
டா வின்சி
வரைந்த
ஓவியம்

வாழ்க்கையில்
வெற்றி பெற்ற
காதல் வரி
ஒவ்வொன்றும்
புன்னகை
வரைந்த
காவியம்

தோல்வியுற்ற
காதல் வரி
ஒவ்வொன்றும்
கண்ணீரில்
நனைந்த
காவியம்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jul-12, 11:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : punnakai oviyam
பார்வை : 199

மேலே