தயக்கம் வேண்டாம்...

எதனையோ தேடி எதனையோ பெற்றேன்
கிடைத்ததில் எனக்கு
சந்தோசம் இல்லை என்றாலும்
கிடைத்தவரையில் சந்தோசம்கொண்டேன்
இதுவும் கிடைக்காமல்
இனியும் எத்தனையோபேர்
என்பதை நினைத்துக்கொண்டு...

கடைசியாக கற்றுக்கொண்டேன்
தாழ்வாய் நினைக்கும்வரை
நம்மால் தலைதூக்க முடியாது என்பதை...

தயக்கமே நம்மில் பலருக்கு தடைக்கல்
தடைக்கல்லை தகர்ப்பதற்கு முன்
தயக்கத்தை தகர்த்தெறியுங்கள்
வருங்காலம் வளமாக...

இப்படிக்கு
க.அனித்பாலா

எழுதியவர் : anithbala (25-Jul-12, 4:14 pm)
பார்வை : 205

மேலே