இரு இதயங்களின் சங்கமம்.....

அது ஒரு அழகிய வைகறைப்பொழுது..கிழக்கு வானம் சிவக்கத்தொடங்கவில்லை காதலரின் கனவில் சூடான நிலவு வைகறையில் சூரியனாய் மெல்ல மெல்ல தானே வருவான்...
என்னைப்போல் அவனுக்கு இன்று ஒன்றும் அவசரம் இல்லை போலும் ஆமாம் நான் இன்று மிகவும் அவசரத்திலும் படபடப்பிலும் இருக்கிறேன் அதர்க்கு காரணம் இன்று என் அன்புக்குரியவள் என்னைப்பார்க்க வருகிறாள்.....
ஒரு வருடத்தின் பின்
நாங்கள் முதன் முதலாக சந்திக்க போகின்றோம்
இதுவரை காலமும் கணணி மூலமும் செல்போன்மூலமும் உரையாடிக்கொண்டிருந்தோம் அவள் போட்டோவைக்கூட நான் முழுதாகப்பார்க்கவில்லை இருந்து அன்பாகப்பேசிக்கொண்டோம் இன்று அவள் வருவதை செல்போன்மூலம் தீர்மானித்தாகி விட்டது இதோ என்னவளை வரவேர்க்க சென்று கொண்டிருக்கிறேன்..
விமான நிலையத்தில் எல்லோரும் பர பரப்பாக இருந்தார்கள் . என்னிலை
யாருக்கும் தெரியாது அங்கும் இங்கும் பார்ப்பதும் மணி பார்ப்பதுமாக நின்று கொண்டிருந்தேன் ..
மனதில் ஒரு வித பட படப்பு என் செல்லக்குட்டி வருவாளோ ஓ உங்களுக்கு தெரியாதில்ல நான் அவளை செல்ல மாக அப்படித்தான் அழைப்பேன் அவளும் எனக்கொரு செல்லப்பெயர் வைத்திருக்கிறாள் அதை நான் வெளியில் சொல்லக்கூடாதாம் அவளின் கட்டளை எனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டுமாம்..
வரவாளோ ..........ஒருவேளை ஏமாற்றி விடுவாளோ சீ என் தீயைப்பற்றி எனக்கு நன்றாகத்தெரியும் வருவாள் நேரம் காலை 6 ,6 .10 .....6 .15 மன்னிக்கவும் அவள் 8 மணிக்கு வருவதாகத்தான் கூறி இருந்தாள் நான் தான் அவசரப்பட்டு இவ்வளவு சீக்கிரமாக வந்து சும்மா அவஸ்தைப்பட்டிக்கொண்டு இருக்கின்றேன்..............இந்தக்கடிகாரம் இன்றைக்கெண்று மிகவும் மெதுவாக ஓடுகின்றதா?ம்ம்ம்...............
ஒரு வேளையாக மணி 7 .48 தாண்டி விட்டது எனக்குள் ஒரு வித பயம் என் உணர்வுகளை வெறும் வார்த்தையால சொல்ல முடியவில்லை
ஒரு குழந்தையின் பிறப்பை எதிர் பார்க்கும் தாயின் தவிப்பாகி விட்டது எனக்கும் இருக்காதா எத்தனை நாட்கள் இநத நாளுக்காகத்த்னே ஏங்கினேன் அவளுக்கும் இந்த தவிப்பு இருக்கும் காட்டிக்கொள்ள மாட்டள் மிகவும் அழுத்தக்காறி என் தீ பொது வாக பெண்கள் அப்படித்தான்,.........
இதோ விமானம் வந்து தரையிறங்குகின்றது நான் அவளின் நிலவு போன்ற முகத்தை என் கண் முன் கொண்டு வருகின்றேன். என்ன ஒரு அழகு
முழு நிலவின் முகம் அழகிய அதில் பிறையளவு நெற்றி ஓரளவு கூர்மையான மூக்கு தக்காழி நிறத்தில் சாயம் பூசாத அந்த உதடுகள் யார் கண்ணாவது பட்டு விடுமோ என்று இறைவனே வைத்த அந்த உதட்டின் கீழ் உள்ள சின்ன மச்சம் அவளை நினைத்தால் முதலில் ஞாபகம் வருவது அந்த மச்சம் தான் . யாரோ என் தோழைத்தட்டுவதாக திரும்பி பார்க்கின்றேன் ................என் கண்முன்னே பதுமையாய் ஒரு அழகு சிலை!!!!!!!!! ''கலோ'' என்னாச்சிடா ம்,ம் ம், அவளின் இந்த வார்த்தை கேட்டுத்தான் சுய நினைவே வந்தது எனக்கு ம்ம்ம் எப்படி இருக்கிறாய் செல்லம் பிரயாணமெல்லாம் எப்படி வார்த்தைகள் எல்லாம் தட்டுத்தடுமாறி வந்தது எனக்கு அவளுக்கும் வார்த்தை வரவில்லை மௌனமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது
மெது வாக அவளது கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு சொல்லுடா என்றாள் .
நானும் ம் வா கோயிலுக்கு போகலாம் என்றேன் இருவரும் எதுவும் பேசாமல் நடந்தோம் அவள் முன்னே சென்றாள் நான் அவள் பின்னால் செல்கையில் அவள் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன் என் தோழின் கீழ் வரும் உயரம் மா நிறம் சேலையில் தான் வந்திருந்தாள் வான் நீலத்தில் சேலை கட்டி இருந்தாள் அவளுக்கு மிகவும் பிடித்த கலர் அது மிகவும் நேர்த்தையாக அதை கட்டி இருந்தாள் அவள் நடையில் ஒரு நளினம் தெரிந்தது ..............
இருவரும் பல்லாவரம் முருகன் கோயிலுக்குள் போனோம் ...........அர்ச்சனையெல்லாம் முடித்து விட்டு அந்த மலையில் ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்தோம் இருவரும் மௌனமாக இருந்தோம் அவள் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது ஏய் ஏண்டி சும்மா சும்மா அழுவுற ....அப்படி அவளிடம் சொன்னாலும் எனக்கும் அழுகை வந்ததென்னமோ உண்மைதான் அவள் போனில் பேசும்போது அடிக்கடி அழுவாள் அப்போதெல்லாம் சொல்வாள் உங்க தோழ்ல சாய்ந்து அழணும் போல இருக்குமா.....முன்னு ம்ம் அதெல்லாம் நடக்கும் நீ கவலைப்படாதேன்னு நானும் ஆறுதல் சொல்வேன் அது இப்போது நடந்தது என் தோழில் சாய்ந்து அழத்தொடங்கினாள் நானும் அழட்டும் கொஞ்சம் மனம் லேசாகும் என்று விட்டு விட்டு அவளது தலை முடியை என் கைகளால் வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தேன்...
அப்படியே அவளது நெற்றியில் மெது வாக முத்தம் ஒன்றைப்பதித்து விட்டு அவளை சமாதானப்படுத்தி வெளியே கூட்டி வந்து அவளுக்கு பிடித்த பொருட்கள் எல்லாம் வேண்டித்தர நினைத்தேன்.ஆனால் அவள் இல்லை வேண்டாம் நான் இனி இங்குதானே இருக்கப்போகின்றேன் அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டாள் ...................................................................................'''..இது இன்னும் தொடரும்''''........இதில் எதும் தவறு இருந்தால் மன்னிக்கவும் இது யார் மனதையும் புண்படுத்த அல்ல என் சொந்தக்கர்ப்பனையே ......... .............இரு உணர்வுகளின் சங்கமம் முகம் காணாமல் அகம் பார்த்து வந்த காதல் இவர்கள் இனிய இல்லறம் காண வாழ்த்துங்கள்.............. நன்றி ...

எழுதியவர் : கவிதை தேவதை. (29-Jul-12, 9:12 am)
பார்வை : 690

மேலே