கடல் துளிகள் !
கரைக்கு ஓடிவந்த அலைகள்
கதறிக்கொண்டு ஓடுகின்றது
காதலரின் அட்டகாசம் !
__________________
கரை வந்த நுரை
கறை படிந்து திரும்புகிறது
கடற்கரையில் குப்பை !
__________________
ஆழ் கடல்
ஆல் கடலாகின்றது
தொழிற்சாலை கழிவு !
__________________
நீல கடல்
செங்கடலாகும் நாளருகில்
மீனவ படுகொலை !
__________________
கடல் நீரில்
கரிப்பு அதிகரிப்பு
அகதிகளின் கண்ணீர் !