கவிஞனின்/படைப்பாளியின் கடமை
ஒளியைத் தருவதே
கவியின் கடமை; ஆயின்
அனைவரோடும் என்றும்பயணிப்பது,
வாழ்வில் இயலாமை.
சில சொற்களின் பொருள்:
''ஒளி'' என்பது அறிவொளியை சுட்டிக்காட்டுகிறது
''கவியின் கடமை'', ''படைப்பாளியின் கடமை'' எனவும் கூறலாம்.
குறிப்பு:
யாவரும் அறிவோம், படைப்பின் முடிவு, மிக முக்கியம்.
படைப்பாளி கடைசியாக சொல்லவரும் கருத்து, வாசகனின் இதய வாசலோடு மற்றும் நின்றுவிடாது, உள்ளே ஆழமாக பயணிக்கவும் வாய்ப்புள்ளது.
உதாரணமாக, கடைசியாக நான் படித்த, நண்பர் கலை அவர்கள் கூறிய,
''ஒரு நிமிடம் துணிந்துவிட்டால் செத்துவிடலாம்;
ஒவ்வொரு நிமிடமும் துணிந்துவிட்டால் வாழ்ந்துவிடலாம்''
இவ்வரிகள், ஆழமாக இதயத்துள் பயணிக்கின்றன.
ஆகையால், முடிவை நல்வழியில் செலுத்துவதற்கு முயற்சிக்கவும். ஏனெனில், படைப்பாளியின் கடமை, அறிவொளியைத் தருவதேயின்றி, கண்களைப்பறித்து காட்டில்விடுவதில்லை.
உதாரணம், துயரச்/துன்பச் சம்பவமானாலும், படைப்பின் நோக்கம், அவற்றை எடுத்துரைத்தபின், அவற்றை களையெடுக்கும் எண்ணத்தை வாசகனுக்கு ஊட்டவேண்டும். அவ்வாறான வார்த்தைகள் இடம்பெறவேண்டும்.
படைப்பின் முடிவு, மாறாக, ''negative thoughts'' - ஐ பேசுமானால், உதாரணமாக, அத்தகைய படைப்பின் கடைசி கருத்து, கெட்டவனுக்கு ''சக்கரைப்பொங்கலே''. அதைவிட, படைப்பின் முடிவை, வாசகனின் மனதில் ''கேள்விகளை எழுப்புமாறு'' முடித்துவிடலாம், இதுவும் நன்றே.
மேற்கூறியவை அனைத்தும், நட்புமுறையில் கூறினேன், அவ்வளவுதான்.