நெசவாளி நான்.

காலையில் ஆறு மணிக்கு ஆரம்பிக்க,
ஐந்தரை மணிக்கே எழுந்து,
பல்துலக்கி, பணியாரம் சாப்பிட்டு,
தறிநெய்வதற்கு உட்கார்ந்தால்,
தூக்கம் தான் வரும்.

தூக்கத்தோடவே
இரண்டு ஊடை தான் சுண்டி இருப்போம்..
அப்போதான் தெரியும்
பாவுல கரப்பான்பூச்சி உட்கார்ந்து
நூலை வெட்டிவிட்டு சென்றிருப்பது...

நூலைக்கட்டி முடிச்சு பார்த்தால்.
காலை சாப்பாட்டு நேரம் வந்திருக்கும்,
காலை சாப்பிட்டு முடித்து பின்,
இன்றைக்காவது ஒன்றறை புடவை நெய்து முடிக்கலாம் என்று யோசித்து,
விரைவாய் செயல்பட ஆரம்பிக்கும் நேரத்தில் நெய்வதற்கு ஊடைக்கு தார் இருக்காதது தெரியும்

பாட்டியிடம் நூல் சுற்ற சொல்லி வங்கிவந்து
சிறிது நேரம் தான் நெய்திருப்போம் ,
மதியசாப்பட்டு நேரம் வந்துவிடும் .

மதியம் சாப்பிட்டு வந்து ஏழு மணிவரை நெய்திருப்போம் ,
முழுதாய் ஒரே ஒரு புடவை தான் நெய்து முடித்திருப்போம் ...

நெயதுமுடித்த புடவையை
மடிக்க உட்காரும் போதுதான்
மிதித்து நெய்த கால்வலி
எல்லாம் பறந்து போகும்,

நான் நெய்த புடவையை
கூட்டுறவு நிலையத்தில் கொடுத்தால்
இருநூறு ரூபாய் தான் கொடுப்பார்கள் ,
அந்த புடவையை விற்பனை கடைகளில் விலைகேட்டல் ஐநூறு ரூபாய் என்பார்கள் ,,

கஷ்டப்பட்டு உழைத்த எனக்கு இருநூறு
கஷ்டப்படமலேயே முந்நூறு சம்பதிகிரர்கள்..
இது தான் கொடுமை .

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம். (5-Aug-12, 7:53 pm)
பார்வை : 321

மேலே