என் காதல்

என் கவிதைகள்
புரியவில்லையென
குற்றம் சொல்கிறாய்
நான் எழுதுவதெல்லாம்
உன் மீதான
என் காதலென்று - நீ
புரிந்துகொள்ளும்வரை
என் கவிதைகள்
புரியாததுதான்....

எழுதியவர் : ராஜவேல் (11-Aug-12, 8:30 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 371

மேலே