எனது எதிர்பார்ப்புகள் இவ்வுலகத்திடம்................
பெண்மையிடம் எதிர்பார்ப்பது ..........
அழகை அல்ல அன்பை............
ஆன்மிகதிடம் எதிர்பார்ப்பது..........
பக்தியை அல்ல பகுத்தறிவை.............
இளைங்கனிடம் எதிர்பார்ப்பது .........
இளமையை அல்ல திறமையை..........
திருமணதிடம் எதிர்பார்ப்பது ...........
இல்லறத்தை அல்ல இனிய காதலை......
அரசியலிடம் எதிர்பார்ப்பது .........
வாக்குறுதியை அல்ல வாய்மையை........
கல்வி இடம் எதிர்பார்ப்பது........
ஏட்டறிவை அல்ல பொதுஅறிவை.........
கடவுளிடம் எதிர்பார்ப்பது......
கருணையை அல்ல நம்பிக்கையை.......
ஆசிரியரிடம் எதிர்பார்ப்பது ............
அதட்டலை அல்ல ஆறுதலை ........
கனவிடம் எதிர்பார்ப்பது ..........
ஆசையை அல்ல ஆற்றலை...
காவல் துறை இடம் எதிர்பார்ப்பது..........
கண்டிப்பை அல்ல கண்ணியத்தை..........
நீதி துறையிடம் எதிர்பார்ப்பது .......
வாய்துடுப்பை அல்ல வாய்மையை..........
மொத்தத்தில் நான் எதிர்பார்ப்பது....
மாற்றத்தை அல்ல மனித நேயத்தை...........