சுதந்திரக் கவி

சுதந்திரப் பறவைகள் நாங்கள்
இளமைச் சிறகுகள் நாங்கள்
இந்தியத் தூண்கள் நாங்கள்
சுதந்திரம் போற்றுவோம் வாருங்கள் !


பூமிக்கே தலை நாடாம்-எங்கள்
பாரதத் திரு நாடாம்.
சிறப்புக்கு பல நாடாம்-எங்கள்
இந்தியா முதல் நாடாம்.
அகிம்சைக்கு ஒரு நாடாம்-எங்கள்
காந்திய நன் நாடாம்.
வழமைக்கு ஒரு நாடாம்-எங்கள்
வளர்நிறை பூ நாடாம் !


வடக்கிலே இமயம் வைத்தே -எங்கள்
இதயத்தையும் இமயம் போல் வைத்தோம் !
தெற்கிலே குமரி வைத்தே-எங்கள்
குமரிகளைத் தாய் போல் மதித்தோம் !
இந்தியப் பெருங்கடல் போலே-எங்கள்
உள்ளம் ஈரம் பட வைத்தோம் !
உருகிவரும் மக்களின் கண்ணீரை-எங்கள்
திருக் கரங்களால் தூய்மையாய் துடைத்தோம் !


எங்கள் நாட்டிலே பலமொழி உண்டு
முதல் மொழியாய் நம்முடைய அன்புண்டு !
எங்கள் நாட்டிலே பலமதம் உண்டு
முதல் மதமாய் "இந்தியன்" என்றுண்டு !
எங்கள் நாட்டிலே பலகடவுள் உண்டு
முதற் கடவுளாய் "பாரதத் தாய்" உண்டு !


சுதந்திரத்திற்காக முன்னோர் பட்ட பெரும்பாடு
அதைப்போற்றி நாளும்நீ "பண்" பாடு !
சுதந்திரத்திற்காக நம்மோர் சிந்திய ரத்தத்துளிகள்
அதை நினைத்து நீ சிந்து கண்ணீர்த்துளிகள் சுதந்திரத்திற்காக உன்னோர் சென்றனர் சிறையோடு
அதைநினைத்து நாளும்நீ வீரம்கொள் நெஞ்சோடு !

நம்நாடு முன்னேற வழி சொல்வேன் !
என்னோடு கைகோரும் ! நிதம் வெல்வோம் !
வாருங்கள் தோழர்களே !
எந்தன் சகோதர்களே !


காந்தி நேரு வரிசையிலே -நாமும்
நிற்போம் கடைசியிலே !
பாரதி, தாசன் கவியினிலே-பாடித்
திளைப்போம் புவியினிலே !


சாதிப்பேயை விரட்டுவோம் சமத்துவமென்னும்
சாட்டை எடுத்தே !
மதநோயை போக்குவோம் இந்தியனென்னும்
மருந்து எடுத்தே !
தீண்டாமைவெறியை சாய்ப்போம் சகோதரத்துவமென்னும்
வாள் எடுத்தே !
லஞ்சத்தீயை அணைப்போம் நேர்மைஎன்னும்
நீர் எடுத்தே !
ஊழலிருட்டை அகற்றுவோம் அறிவென்னும்
விளக்கு எடுத்தே !
அநீதியை மாற்றுவோம் துணிச்சல்என்னும்
முடிவு எடுத்தே !
பூக்கள் கொண்டு வந்தால் வரவேற்ப்போம்
வாட்கள் கொண்டு வந்தால் தலைஎடுப்போம் !


சுதந்திரம் போற்றுவோம்
சுயநலம் நீக்குவோம் !
ஜெய் ஹிந்த் ! வந்தே மாதரம் !

எழுதியவர் : கா.பாலமுரளிகிருஷ்ணா (17-Aug-12, 4:23 pm)
பார்வை : 167

மேலே