ஓர் வார்த்தை சொல்லடி

நீ பலமுறை கிழித்தெறிந்த காகித கிறுக்களை
தலையணையாக்கி உறங்கினேன் . . .
கனவிலும் கிழித்து வீசுகிறாய்...

பின்னிமுடித்து பூ சூடும் உன் கூந்தலும்
சொல்லுதடி
என் மீதான காதலை ...

என்னை ஆயிரம் வசை பாடினாலும்...
இறுதியாய் பார்க்கும் ஒற்றை பார்வை சொல்லுதடி
உன் காதலை

நீ மறைத்து ஒளித்து ஓடினாலும்...
உன் வெட்கம் வெளிபடுத்துகிறது
என் மீதான காதல் ...

கொல்லாமல் கொல்லும் பார்வையால்
நித்தமும் சாகிறேன்!
ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போ
நான் உன்னவள் என்று
சில நொடி உயிர் வாழ்கிறேன்!

எழுதியவர் : ஜெயாதேவி (19-Aug-12, 8:34 pm)
பார்வை : 212

மேலே