மனக்கதவைத் திறந்துவிடு,

உன்னால் முடியாது ஒருபோதும்,
சொன்னார்கள் சிலபேர்,
ஒருமுறையாவது முயற்சி,
கொள்ளாமல் விடமாட்டேன்,
களமிறங்கி வெல்லாமல் வரமாட்டேன்,
வெற்றி எனக்குத்தான் என்று சொல்ல,
எனக்குள்ளெ இருந்த மனக்குழப்பம்,
மறைந்ததுவே, கண்களிலே அச்சமில்லை,

உன்னால் முடியாது என்று சொல்ல,
ஓராயிரம் பேர் ஊரிலுள்ளார்,
அவர் பொய்யாகப் போகட்டும்,
உனக்குள்ளே உள்ள திறமையெல்லாம்,
உலகத்தார் அறியட்டும்,
மனக்கதவைத் திறந்துவிடு,
இந்த மாநிலத்தை வென்றிடலாம்.

எழுதியவர் : S.ராஜேந்திரன் (21-Aug-12, 10:52 am)
பார்வை : 235

மேலே