குமுறுகிறாள் ஒரு விதவைக்கு பதில்........

ஏன் ஏன் இந்த அவல நிலை?
பெண் குழந்தை பிறந்து
முதலில் குளிக்க வைக்கும் போதே
மஞ்சள் உண்டு அதற்கு
பொட்டு உண்டு அந்த குழந்தைக்கு...
பொட்டு என்பது அப்போதே கிடைத்த உரிமை
அப்படியானால் ஏன் கணவன் இறந்த
பிறகு பொட்டு மற்றும் மஞ்சள் உரிமை
மறுக்கப்படுகிறது?
கணவர் இறந்த பின்
ஏன் தன் நிலை மாற்ற வேண்டும்?
எந்த பொது இடத்திற்கும் போக
ஏன் தயங்க வேண்டும்?

எந்த ஒரு கலர் புடவையும் நெய்யும் போது
அத்துடன் வெள்ளை சாயமும்
சேர்க்கப்படுவது இயற்கை தானே?
வெண்மை என்பது தூய்மைதானே ?
வெள்ளை உடுத்த தயங்க வேண்டாம்
வீணை ஏந்திய சரஸ்வதி தேவி
வெள்ளாடை தானே உடுத்தி
வீற்று இருக்கிறாள்?
இந்த வெண்மை கோலத்தை பார்க்க
தயங்குவோர் கண்களை
கருப்பு துணி கொண்டு கட்டி கொள்ளட்டும்..

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்
இப்படி வீண் சாஸ்திரம் பார்ப்பது
மட்டும் நம்மிடையே மாறாது.....
கலக்கமில்லாமல் வாழ்வை
எதிர் கொள்ள வேண்டும்

எழுதியவர் : சாந்தி (23-Aug-12, 9:28 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 147

சிறந்த கவிதைகள்

மேலே