கணவனையே காதலித்தல் சிறந்தது
பூ ஒன்று மனம் உவந்து
மணம் முடிக்க போகுது,
கண்களில் பூக்கும் கனவோடு
கணவன் வீடு போகுது!
அவள் இதயம்
சரியான பாதையில் போகுது,
சகல சௌபாக்கியம் கிடைக்கும் நாளிது,
வாழ்க்கையில் ஒளிவெள்ளம் பெருகுது!
மாலை சூடி
அலங்காரம் செய்து
அவள் வாழ்க்கை வளமாகப் போகுது,
இல்லறம் நல்லறமாகத் தோனுது!
பெற்றோர்கள் விருப்பப்படி
அவர்கள் பார்த்த மாப்பிள்ளையை
மாற்றமின்றி மணமுடித்துக் கொண்டது,
மங்கலமாய் வாழப் போகுது!
காதலென்றால்
வீசை என்னவென்று கேட்டது?
காதலர்கள் வேண்டுவது
காமமென்று அறிந்து கொண்டது!
கல்யாணத்திற்குப் பின்
கணவனையே காதலித்தல் சிறந்தது
என உணர்ந்தது – மனமும்
இப்போது நிர்மலமாய் உள்ளது!