ஆசை...!
அம்புலி உன்னை பூமியில்
கண்டு
ஆசைதனை நெஞ்சில் கொண்டேன்
பூ முடித்த உன் கூந்தலில்
என் மனம் உறவாட ஆசை
வண்டாக!
மையிட்ட உன் கண்களில்
என் முகம் மலர ஆசை
புருவமாக!
உன் பத்து விரல்களும்
எனக்கு முது ரதமாக
ஆசை!
நீ எனக்கு எப்பொழுதும்
சொர்க்கமாக இருக்க
ஆசை!