ஒரு சொல் உலகம்
பிறப்பறியார் இறப்பறியார்
பின்னேது பிரிவுத்துயரம்
வாழ்வின் கோணங்கள்
வர்ணங்களில் முத்திரை
உணர்ச்சிகள் அலையில்
உள்ளுணர்வுப் போராட்டம்
வயது கடந்துவிட்டால்
விலைபேசும் வாலிபம்
கண்சிமிட்டும் நேரங்கள்
கண்ணீரைத் துடைத்துவிட
துணைதேடும் துணிச்சல்
திரைப்பட துணுக்குகள்
ஞாபகங்கள் ஞாயிறுமட்டும்
தனிமைதேடும் கூட்டு
காதலென்ற ஒருசொல்
நிலைக்கும் பிரிவில்மட்டும்
பித்துப்பிடிக்கும் மனது
இறந்தது பெற்றவர் கனவு.....
நடைபிணமாய் காலும்
காதலின் உயிர்தேடி....
காதல்சொல் காண்பவரிடமல்ல
காலத்தை காதலிப்பவரிடம்......
இனித்திடும் கசப்புகள்
ஒருசொல் உலகத்தில்...
-இப்படிக்கு முதல்பக்கம்