கண் திறந்து பாருங்கள், நான் தெரிவேன்.
அன்புள்ள தாதிகளே, நினைப்பதென்ன,
உங்கள் பார்வை என் நிலைமை கண்டு,
தலைகுலைந்த, ஒளியிழந்த முதியவள் நான்,
எடுத்த சோறும் கைவிடுத்துபோகும்,
உரத்த குரலாலே நீங்கள் என்னை,
உணர்த்துவதும், விடை கொடுக்கமுடியாமல்,
விழித்திருக்கும் இந்த முதியவளைக் கண்டீர்கள்.
அன்புத்தாதியரே அமருங்கள் என் அருகில்,
கடந்த வாழ்வை நான் சொல்வேன்.
பத்து வயதில் பெற்றோரின் அன்பு மகளாக,
தங்கை, தம்பி தனையனுடன்,
பொங்கும் இன்ப ஆசையுடன் வாழ்ந்த காலம்,
பதினாறில் பருவமங்கை ஆனேன்,
சிறகடித்துப் பறந்து சென்று, மனம் கவர்ந்த,
காதலனைக் கனவு கண்ட காலம் அது,
இருபது வயதினிலே எல்லோரும் வாழ்த்த,
கல்யாணப் பெண் ஆனேன், கணவனுக்கு,
அவன் அன்பு மனைவியானேன்,
பிள்ளைகள் பிறந்ததுவே, அவரைப்
பேனிநலம் காக்க, பெருந்தவமே செய்தேனே.
நாற்பது வயது, என் மக்கள் வளர்ந்தனரே,
தன் குடும்பம், குழந்தையென,
என்னை விட்டுச் சென்றனரே,
அருகிருந்து துயர்துடைத்த என் கணவர்,
காலத்தில் ஒன்றாகக் கலந்து விட்டார்,
இனி வரும் காலம் எப்படியோ?
இருளடைந்து போய்விடுமோ,
முதுமையின் கைப்பிடியில் சிக்கி,
இயற்கையின் அரவனைப்பில்,
தெம்பிழந்து, தெளிவிழந்து போவேனோ,
கல்லானது இதயம், என்றாலும்,
என்னுடலில் வாழ்ந்திடுவாள்,
இளம் பெண்ணே எப்பொழுதும்.
அந்த இனிமையான நாட்கள்,
பட்ட வேதனைகள் நினைவில் வந்தது,
கடந்தது காலம் விரைந்தது நாட்கள்,
நிலையில்லா வாழ்கை இது, தாதிகளே,
கண் திறந்து பாருங்கள், நான் தெரிவேன்,
முதுமைக்குள் இளமையெனும் கன்னியாக.