உழவனுக்கோர் யோசனை!

ஏர் பேனா கொண்டு பூமித்தாளில்
எழுதப்பழக்கு.

மண்ணின் கருப்பைக்குள் இருந்துதான்
பசிக்கு ருசி கிடைக்கிறது என்று
பந்தி வை.

அவன் குடும்பத்தையும் கூப்பிடு
விருந்துக்கு நிற்கும் படி வேண்டு
சூரியனுக்கு படையல்
இரண்டாவதாய் இருக்கட்டும்.
முதலில் இந்த
சோம்பேறிகளுக்கு படை!

ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (2-Sep-12, 12:27 pm)
பார்வை : 186

மேலே